தலைவர் 173 படத்தை என்னால் முடிக்க முடியுமா என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி ஓபன் டாக்
Director Cibi Chakravarthy about Thalaivar 173: தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் படம் தலைவர் 173. இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்று தெரிவதே பெரிய சர்ப்ரைஸாக இருந்த நிலையில் தற்போது படத்தின் இயக்குநர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் 173
தமிழ் சினிமாவில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டான். இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தின் மூலம் சிபி சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி எந்த நடிகரை இயக்குவார் என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகே சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியானது.
அதன்படி இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படத்தினை இயக்க ஒப்பந்தம் ஆனார். இவர் தான் அந்தப் படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானதில் இருந்தே தொடர்ந்து பல விமர்சனங்கள் ரசிகர்களிடையேயும் சினிமா வட்டாரங்களிலும் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி வெளிப்படையாக பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தலைவர் 173 படம் குறித்து ஓபனாக பேசிய சிபி சக்ரவர்த்தி:
அதன்படி வித் லவ் படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசிய சிபி சக்ரவர்த்தி தலைவர் 173 அறிவிப்புக்குப் பிறகு நான் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுதான். என்னால் இந்தப் படத்தை வெற்றிகரமாக முடிக்க முடியுமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது, அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு தலைவர் ரசிகனாக அன்புடன் சொல்கிறேன், படம் பார்த்த பிறகு நீங்கள் திருப்தி அடைவீர்கள், இது ஒரு வாக்குறுதி என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜன நாயகன் பட பிரச்சனை… வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்
இணையத்தில் கவனம் பெறும் சிபி சக்ரவர்த்தி பேச்சு:
“This is the first time I’m meeting after #Thalaivar173 announcement. Many have doubts that i would be able to pull off the film, I can understand😀. I’m saying with love as Thalaivar fan, you will be satisfied after watching, it’s a promise💯🔥”
– #Cibipic.twitter.com/cFNqYOeFT2— AmuthaBharathi (@CinemaWithAB) January 31, 2026
Also Read… சூர்யா 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் வைரலாகும் தகவல்