Radhika Sarathkumar: ‘தேசிய விருது உனக்கு வரணும்’.. தாய் கிழவி படத்தை பார்த்து ராதிகாவை பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா!
Bharathiraja Praised Radhika Sarathkumar: இயக்குநர் பாரதிராஜா சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவதிப்பட்டுவருகிறார். அந்த வகையில் இவரை சமீபத்தில் ராதிகா சரத்குமார் சந்தித்திருந்த நிலையில், தாய் கிழவி படத்தை பாராட்டி ராதிகா சரத்குமாருக்கு தேசிய விருது வரணும் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா மற்றும் ராதிகா சரத்குமார்
கோலிவுட் சினிமாவில் பிரபல கதாநாயகியாக படங்களில் நடித்துவருபவர் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar). இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் படங்களில் கதாநாயகியாக நடித்துவந்த நிலையில், தற்போது முக்கிய வேடங்களிலும் மற்றும் நடிகர்களுக்கு அம்மா வேடங்களிலும் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகியிருந்த படம்தான் தாய் கிழவி (Thaai Kizhavi). இந்த படத்தில் லீட் நாயகியகவே ராதிகா நடித்திருந்த நிலையில், கடந்த 2026 பிப்ரவரி 27ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்க, சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரித்திருந்தார். இந்த படத்தை பல்வேறு பிரபலங்கள் பாராட்டிவந்தனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார், பாரதிராஜாவை (Director Bharathiraja) நேரில் சந்தித்திருந்தார்.
இயக்குநர் பாரதிராஜா சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சையில் உள்ளார். அந்த விதத்தில் நடிகை ராதிகா சரத்குமார், அவரை சந்தித்து நலம் விசாரித்திருந்தார். அப்போது ராதிகாவிடம் பேசிய பாரதிராஜா, தாய் கிழவி படத்தை பார்த்ததாகவும், அதற்காக தேசிய விருது கிடைக்கவேண்டும் உனக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறப்பான நடிகை.. கருப்பு படத்தில் திரிஷாவை நடிக்கவைக்க காரணம் இதுதான் – ஆர்.ஜே.பாலாஜி!
இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்தது குறித்து நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
அந்த வீடியோவில் நடிகை ராதிகா சரத்குமார், “உங்களால்தான் நான் இப்போது இப்படி படங்களில் நடிக்கிறேன். தாய் கிழவி படத்தை நீங்கள் பார்த்தீர்களாமே. படம் நன்றாக இருக்கிறதா?” என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குநர் பாரதிராஜா, “உனக்கு நேஷனல் அவார்ட் வரணும்” என தெரிவித்திருந்தார். உடனே ராதிகா சரத்குமார், “எனக்கு நேஷனல் அவார்ட் கிடைத்தாலே உங்களின் காலில் வைத்துவிடுகிறேன்” என தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த வீடியோவின் கீழ் பல்வேறு நடிகர்களாக மற்றும் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ் சொன்ன தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் ஜோடி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
இயக்குநர் பாரதிராஜா தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகர்கவும் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் தனது மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் இறப்பிற்கு பிறகு, உடல்நிலை சரியில்லாமல் போனார். அந்த வகையில் சில காலமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகிறார். இந்நிலையில் இவரை அடிக்கடி பல்வேறு பிரபலங்களும் சந்தித்துவருகிறார்கள். அந்த வகையில் நடிகை ராதிகா சரத்குமார் சந்தித்திருந்த நிலையில், அவரின் தாய் கிழவி படத்தை பார்த்ததாகவும், அவருக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும் எனவும் பாரதி ராஜா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.