என் இயக்கத்தில் அந்தப் படம்தான் பிலாசபி பேசுதுனு நினைக்கிறேன் – இயக்குநர் பாலா

Director Bala Talks About Naan Kadavul Movie: தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படம் குறித்து முன்னதாக பேட்டி ஒன்றில் அவர் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

என் இயக்கத்தில் அந்தப் படம்தான் பிலாசபி பேசுதுனு நினைக்கிறேன் - இயக்குநர் பாலா

இயக்குநர் பாலா

Published: 

07 Apr 2026 19:14 PM

 IST

தமிழ் சினிமாவில் மிகவும் அழுத்தமான கதைகளை எந்தவிதமான பூசி மொழுகள்களும் இல்லாம் அப்படியே மிகவும் டார்க்காக எடுப்பதில் திறமையனாவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படங்களிலும் நிச்சயமாக மனதை உழுக்கும் ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வரும் விக்ரம் மற்றும் சூர்யாவின் சினிமா கெரியரில் பாலாவின் இயக்கத்தில் வெளியான படங்கள் ஒரு மைல்கல்லாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இயக்கத்தில் வெளியான படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மற்ற யார் இயக்கத்தில் நடிக்கவும் தகுதியானவர்கள் என்ற பெயர் கிடைப்பதும் வழக்கமாக உள்ளது. அதன்படி இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் மற்றும் அவன் இவன் என தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது.

அதன்படி இயக்குநர் பாலா இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வணங்கான். நடிகர் அருண் விஜய் இந்தப் படத்தில் வாய் பேசமுடியாத ஊமை நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து இயக்குநர் பாலா வெளிப்படையாக பேசி இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் பாலா அளித்தப் பேட்டி ரசிகர்களிடையே கவணத்தை ஈர்த்து வருகின்றது.

என் இயக்கத்தில் அந்தப் படம்தான் பிலாசபி பேசுதுனு நினைக்கிறேன்:

இந்த நிலையில் அந்தப் பேட்டியில் இயக்குநர் பாலாவிடம் உங்களது இயக்கத்தில் வெளியான படங்களில் எந்தப் படம் பிலாசபி பேசுகிறது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய பாலா எனக்கு பிலாசபி எல்லாம் தெரியல. அப்படி சொல்லவேண்டும் என்றால் அது நான் கடவுள் தான். எங்கையோ உடல் ஊனத்துடன் பிறந்து யாரிடமோ விற்கப்பட்டு வாழ்க்கையில் என்ன என்னமோ சந்திக்கிறார்கள். அந்தப் படத்தை நான் அப்படி சொல்வேன் என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மீண்டும் மீண்டுமா? கடைசி நேரத்தில் ஒத்திவைத்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு – ஏமாற்றத்தில் ரசிகர்கள்!

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் பாலாவின் பேச்சு:

Also Read… நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் சாய்ஸ் கிடையாது – இயக்குநர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?