Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்கும் இயக்குநர் யார்?

Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது இயக்குநர் நெல்சன் இயகக்த்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்தப் படத்தை யார் இயக்குவார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்கும் இயக்குநர் யார்?
ரஜினிகாந்த்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 12 May 2025 07:38 AM

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் வெளியானது. இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினிகாந்த் தவறான ஒருவரை குற்றவாளி என்று நினைத்து என்கவுண்டர் செய்துவிடுகிறார். உண்மை தெரிந்த பிறகு அவர் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ராவ் ரமேஷ், அபிராமி மற்றும் ரமேஷ் திலக் என பலர் நடித்திருந்தனர். படம் கடந்த 10-ம் தேதி அக்டோபர் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகரக்ளிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனராஜ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணி வைத்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்ட போதே ரசிகரக்ளிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்தப் படம் குறித்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர் மற்றும் மோனிஷா பிளெஸ்ஸி என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனது சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனே நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் கலந்துகொண்டார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் தங்கள் வேடங்களில் மீண்டும் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமாரும் தங்கள் கேமியோ வேடங்களில் மீண்டும் நடிக்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனது. படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்குவார்கள் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதன்படி நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான் வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் அருண் குமார் அல்லது நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தை தற்போது இயக்கி வரும் இயக்குநர் எச் வினோத் இவர்கள் இரண்டு பேரில் யாராவது ஒருவர் நடிகர் ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!
தொடர்ந்து நம்பர் ஒன்! டெஸ்ட் கேப்டனாக கோலி படைத்த சாதனைகள்!...
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
கண் புற்றுநோயின் எச்சரிக்கை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!...
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!
விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவு!...
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?
தமிழகத்தில் தொடரும் வெயிலும் மழையும்...கனமழை எப்போது?...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்...
டூரிஸ் ஃபேமிலி படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்......
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?
உலர் பழங்கள்... நன்மைகள் மற்றும் அவற்றை எப்போது உண்ணலாம்?...
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!
10 செயற்கைக்கோள்கள் மூலம் இந்தியாவை கண்காணிக்கிறோம் - இஸ்ரோ!...
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!
பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவத்திற்கு பிரதமர் மோடி உத்தரவு..!...
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி..!...
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதிய லாக் செய்த படக்குழு!...
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA
இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த BLA...