நடிகர் சூர்யா உடன் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு – அபிஷன் ஜீவிந்த்
Director Abishan Jeevinth Recent Interview : தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக நடித்துள்ளவர் அபிஷன் ஜீவிந்த். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யா - அபிஷன் ஜீவிந்த்
தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் சமீப காலமாக சிறப்பான கதைகளை மையமாக வைத்து பல அறிமுக இயக்குநர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்தப் படங்களை தொடர்ந்து மக்கள் மட்டும் இன்றி பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் வெளியான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. நடிகர் சசிகுமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கி இருந்தார். இது அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மக்கள் மட்டும் இன்றி திரையுல பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார். இவர் நாயகனாக நடித்துள்ள வித் லவ் படம் வருகின்ற 6-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அபிஷன் ஜீவிந்த் சமீபத்திய பேட்டியில் பேசிய வைரலாகி வருகின்றது.
சூர்யா உடன் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு:
அதன்படி சமீபத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் பேட்டி ஒன்றில் பேசியபோது தனக்கு நடிகர் சூர்யாவை இயக்க வேண்டும் என்பது கனவு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் வாரணம் ஆயிரம் திரைப்படம் எனக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அந்தப் படத்தில் பல நிஜ வாழ்க்கை தருணங்களைக் காண்கிறேன், அதனால்தான் அது என்னோட இவ்வளவு கனெக்டா இருக்கு. சூர்யா சார் சிம்ரன் மேடமின் பாதங்களைத் தொடும் காட்சி எனக்குள் ஒரு ஸ்ட்ராங்கான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோன்ற ஒரு காட்சியை நான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திலும் பயன்படுத்தியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது சூர்யா ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… தீவிர உடற்பயிற்சியில் நடிகை சிம்ரன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் பேச்சு:
” Working with @Suriya_offl is my biggest dream & I also have a wish that it should be a film like Vaaranam Aayiram♥️..”
– @Abishanjeevinth pic.twitter.com/FSArhP8e2R
— Suriya Fans Trends (@Trendz_Suriya) January 30, 2026
Also Read… தனுஷின் டி55 படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!