ஏஐ உதவியுடன் மாற்றப்பட்ட தனுஷின் அம்பிகாபதி கிளைமேக்ஸ் – இயக்குநர் வேதனை!

Director Slams Recut : நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அம்பிகாபதி திரைப்படம் ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏஐ உதவியுடன் இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் மாற்றப்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஏஐ உதவியுடன் மாற்றப்பட்ட தனுஷின் அம்பிகாபதி கிளைமேக்ஸ் - இயக்குநர் வேதனை!

தனுஷ் - சோனம் கபூர் - ஆனந்த் எல்.ராய்

Published: 

21 Jul 2025 17:51 PM

தனுஷ், சோனம் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ராஞ்சனா. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஈரோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. இந்தப் படம் ஹிந்தியில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தமிழிலும் இந்தப் படம் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அம்பிகாபதி திரைப்படம் தனுஷின் பிறந்த நாளான ஆகஸ்ட் 1, 2025 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. இதனை படத்தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஏஐ உதவியுடன் கிளைமேக்ஸ் மாற்றம்

இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கும் வெர்ஷனில் தனுஷ் உயிர் பிழைத்துக்கொள்வது போலவும், அவர் சோனம் கபூருடன் இணைவது போலவும் ஏஐ உதவியுடன் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் ஆனந்த் எல்.ராய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ஏஐ உருவாக்கிய புது கிளைமேக்ஸுடன் வெளியாகும் தனுஷின் ‘அம்பிகாபதி’ 

இயக்குநரின் வேதனை

இந்த மாற்றம் குறித்து இயக்குநர் ஆனந்த் எல். ராய் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இது மிகவும் மோசமான செயல். எனது படைப்பு சுத்திரம் பறிக்கப்பட்டது போல உணர்கிறேன். ரசிகர்களால் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ஏற்றுக்கொண்டு அவர்கள் கொண்டாடி வரும் கிளைமேக்ஸ் தற்போது மாற்றப்பட்டுள்ளது. இது படத்தை மட்டுமல்ல ரசிகர்களின் ரசனையைும் கேள்விக்குறியாக்குகிறது. தன்னிடம் இந்த முடிவு குறித்து ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார்.

தயாரிப்பு நிறுவனத்தின் பதில்

இதுகுறித்து உலக அளவில் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இயக்குநரின் குற்றச்சாட்டுகள் சட்டப்பூர்வமாக ஏற்கத்தக்கது அல்ல. திரைப்படத்தின் காப்பூரிமை மற்றும் சட்டப்பூர்வ உரிமைகள் தயாரிப்பாளுர்கே சொந்தமானவை. அவை அவர்களின் சட்ட உரிமைகளுக்குள் உள்ள செயல்பாடுகள் என்றும் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்க : Entertainment News Live Updates: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்!

இந்த விவகாரம், ஏ.ஐ. மூலம் பழைய படங்களை மாற்றும் விவகாரத்தில் ஒரு முக்கிய சர்ச்சையை தூண்டியுள்ளது. எதிர்காலத்தில், தயாரிப்பாளர்கள் தனிப்பட்ட லாபத்திற்காக படங்களில் தங்களுக்கு விருப்பமான முறையில் மாற்றம் செய்யலாம் என்பதற்கான வரம்புகள் குறித்து இயக்குநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது முறையாக இணையும் ஆனந்த் எல்.ராய் – தனுஷ் கூட்டணி

இ இயக்குநர் ஆனந்த் எல். ராய் தற்போது தனுஷுடன் மீண்டும் இணைந்து  தேரே இஷ்க் மெயின் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக கிரீத்தி சனோன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படம் நவம்பர் 28, 2025 அன்று திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.