விஜய் ஜன நாயகன் படத்தில் ‘ஒன் லாஸ்ட் சாங்’ என்ற பாடலை பாடுகிறாரா? வைரலாகும் தகவல்
Jana Nayagan: நடிகர் விஜய் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தனது படங்களில் ஏதேனும் ஒரு பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது இறுதிப் படம் என்று நடிகர் விஜய் கூறியுள்ள ஜன நாயகன் படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் (Actor Vijay). இவர் தற்போது இறுதியாக நடித்து வரும் ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துவிட்டார். அதன்படி நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ஜன நாயகன் தான் அவரது நடிப்பில் வெளியாக உள்ள கடைசிப் படம் ஆகும். இந்த நிலையில் படத்தில் இருந்து ஒரு தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
அதன்படி நடிகர் விஜய் தான் நடிக்கும் படங்களில் ஏதேனு ஒரு பாடலைப் பாடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம். அந்த மாதிரி இந்த ஜன நாயகன் படத்திலும் நடிகர் விஜய் ’ஒன் லாஸ்ட் சாங்’ என்ற பாடலைப் பாட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் நடிப்பில் விறுவிறுப்பாக நடைப்பெறும் ஜன நாயகன் படம்:
நடிகர் விஜயின் நடிப்பில் இறுதியாக உருவாகி வரும் இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும் நடிகர் விஜய்க்கு நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜயின் வில்லனாக நடிகர் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, நரேன், ஸ்ருதி ஹாசன், வரலக்ஷ்மி, மோனிஷா ப்ளெசி என பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் இந்தப் படத்தை தயாரித்து வருகின்றது.
மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தமிழி தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இவர் முன்னதாக இசையமைத்த விஜயின் படங்களில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் பாடகாராப் பாடிய பாடல்கள் விவரம்:
நடிகர் விஜய் ரசிகன் படத்தில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்ற பாடலையும், தேவா படத்தில் ஒரு கடிதம் எழுதினேன், அய்யய்யோ அலமேலு, விஷ்ணு படத்தில் தொட்டப்பேட்ட ரோட்டு மேலே பாடல் என தொடர்ந்து பாடிய விஜய் இறுதியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விசில் போடு மற்றும் சின்ன சின்னல் கண்கள் வரை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.