ஏஐ உருவாக்கிய புது கிளைமேக்ஸுடன் வெளியாகும் தனுஷின் ‘அம்பிகாபதி’ – வெளியான சூப்பர் அப்டேட்!

Ambikapathy to Return : ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் - சோனம் கபூர் இணைந்து நடித்த ராஞ்சனா திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்தப் படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் ரீரிலீஸ் செய்யப்படுகிறது.

ஏஐ உருவாக்கிய புது கிளைமேக்ஸுடன் வெளியாகும் தனுஷின் அம்பிகாபதி - வெளியான சூப்பர் அப்டேட்!

தனுஷ் - சோனம் கபூர்

Published: 

19 Jul 2025 18:13 PM

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ் (Dhanush). தனுஷ் நடிப்பில் கடந்த ஜூன் 20, 2025 அன்று வெளியான குபேரா (Kubera) திரைப்படம்,  தமிழை விட தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது அவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஞ்சனா திரைப்படம் மூலம் ஹிந்தியில் ஹீரோவாக அறிமுகமானார் தனுஷ். அவருக்கு முதல் படமே  ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. . தமிழில் அந்தப் படம் அம்பிகாவதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியாநது.

ஏஐ உதவியால் மாறும் கிளைமேக்ஸ்

இந்த நிலையில் ராஞ்சனாவின் தமிழ் வெர்ஷனான அம்பிகாவதி விரைவில் மறுவெளியீடு செய்யவிருக்கிறது. ஆனால் இந்த முறை மாறுபட்ட கிளைமேக்ஸ் காட்சியுடன் வெளியாவிருக்கிறது. இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் தனுஷ் இறந்துவிடுவார். ஆனால் இந்த முறை தனுஷும் சோனம் கபூரும் சேர்வது போல பாசிட்டிவான கிளைமேக்ஸுடன் ரீரிலீஸ் செய்யப்படவிருக்கிறதாம். ஆனால் கிளைமேக்ஸை படக்குழுவினர் மீண்டும் படமாக்கப்போவதில்லை. அவற்றை ஏஐ உதவியுடன் மாற்றம் செய்யவிருக்கின்றனர். இதுவரை வெளியான ரீரிலீஸ் படங்களில் ஏஐ மூலம் கிளைமேக்ஸ் மாற்றப்படுவது இதுவே முதல் முறை. இதனை இயக்குநர் ஆனந்த் எல் .ராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க: முதல் பாதியைக் கேட்ட பிறகு, கூலியில் ரஜினி நடிக்க முடிவு செய்தாரா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

ராஞ்சனாவுக்கு பிறகு அட்ராங்கி ரே படத்துக்காக நடிகர் தனுஷ், இயக்குநர் ஆனந்த் எல்.ராய், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்தனர். கூடுதலாக சிறப்புத் தோற்றத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்தப் படம் நேரடியாக  ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த டிசம்பர் 21, 2021 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

3வது முறையாக இணையும் தனுஷ் – ஆனந்த் எல்.ராய் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி

தற்போது தேரே இஷ்க் மெயின் என்ற படத்துக்காக இந்த கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்த சனோன் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற நவம்பர் 21, 2025 அன்று வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க : சிவகார்த்திகேயன் மீது ஏன் இவ்வளவு வன்மம்.. லவ் மேரேஜ் பட இயக்குநர் வருத்தம்!

நடிகர் தனுஷ் – நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள குபேரா திரைப்படம் ஜூலை 19, 2025 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தின் மூலம் நடிகர் தனுஷ் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளனர். மேலும் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இந்தப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள்  அவருக்கு தேசிய விருது உறுதி என கூறி வருகின்றனர்.