இணையத்தில் கசிந்தது தனுஷின் குபேரா படம்… அதிர்ச்சியில் படக்குழு

Actor Dhanush Kubera Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் குபேரா படம் இணையத்தில் கசிந்துள்ளது. இது படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கசிந்தது தனுஷின் குபேரா படம்... அதிர்ச்சியில் படக்குழு

குபேரா படம்

Published: 

22 Jun 2025 10:50 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் குபேரா (Kubera Movie). இதுவரை எப்போதும் நடிக்காத வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் படம் கடந்த 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம்  ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படம் தற்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி படம் வெளியாகி இரண்டு நாட்கள் முடிவதற்கு முன்பே இணையத்தில் படம் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாதிரியான குற்றச் செயல்களுக்கு எதிராக அரசு பல சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலு சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமாகவே மாறிவிட்டது.

வசூலில் பாதிக்கப்படுமா குபேரா படம்?

குபேரா படம் திரையரங்குகளில் வெளியான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்துள்ளது. இதனால் தியேட்டரில் வருகை குறைந்து வசூலில் பாதிப்பு ஏற்படுமா என்று ரசிகர்களும் படக்குழுவினரும் அச்சத்தில் உள்ளனர். இந்த மாதிரியான படங்கள் இணையத்தில் கசியும் செயல் ஒட்டுமொத்த படக்குழுவின் உழைப்பையும் திருவதாக உள்ளது என்றும் இது போன்ற செயல்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் க்ரைம் ட்ராமாவாக வெளியான குபேரா படம்:

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் அரசியல் கிரைம் ட்ராமாக திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்க நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுன் நடிகர் நாகர்ஜுனா முன்னணி வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிச்சைகாரனாக இருக்கும் நடிகர் தனுஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடும் மனிதராக ஏன் மாறுகிறார் என்பதே படத்தின் கதை. அரசியல் பலம், பண பலம் என்று பல சமூகப் பிரச்சனைகளை இந்தப் படம் வெளிப்படையாக பேசியுள்ளது என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

குபேரா படக்குழு வெற்றி விழா கொண்டாடியா எக்ஸ் தள பதிவு: