Kara Movie: கர பட தனுஷின் கதாபாத்திர அறிமுகம் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!

Faces Of Kara Update: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரின் நடிப்பில் 54வது படமாக தயாராகியுள்ளதுதான் கர. இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவரும், தனுஷின் கர பட கதாபாத்திரம் அறிமுகம் எப்போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Kara Movie: கர பட தனுஷின் கதாபாத்திர அறிமுகம் எப்போது? படக்குழு கொடுத்த அப்டேட்!

தனுஷ் கர திரைப்படம்

Updated On: 

23 Mar 2026 19:45 PM

 IST

இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில், தனுஷ் (Dhanush) கதாநாயகனாக நடித்துள்ள அதிரடி திரைப்படம்தான் “கர” (Kara). இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் (GV. Prakash) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் தனுஷின் படங்கள் தொடர்ந்து உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கர படத்தில் நடிகர் தனுஷ் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 18வயது வித்தியாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தில் தனுஷ் “கரசாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில், போர் தொழில் படத்தை போலவே எதிர்பாராத பல திருப்பங்களுடன் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது.அந்த விதத்தில், கர திரைப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் அறிமுகம் குறித்து படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. கர படத்திலிருந்து “Faces Of Kara” என்ற கதாபாத்திர அறிமுகம், 2026 மார்ச் 24ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா – எந்தப் படத்தில் தெரியுமா?

தனுஷின் Faces Of Kara ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:

இந்த கர திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இடைப்பட்ட மாதத்தில் தொடங்கிய நிலையில், 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் முழுவதுமாக நிறைவடைந்தது. இந்த படத்தில் தனுஷ், மமிதா பைஜுவுடன் நடிகர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு, என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் மமிதா பைஜூ மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், கிட்டத்தட்ட ரூ 100 முதல் 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 25 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை.. ராதிகா சரத்குமாரின் தாய் கிழவி பட மொத்த வசூல் இத்தனை கோடியா?

இந்த 2026ம் ஆண்டில் வெளியாகும் முதல் தனுஷ் படம் என்ற நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்த படம் வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகும் நிலையில், இன்னும் 1 மதம் மட்டுமே உள்ளது. அதன் காரணமாக இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..