Kara Movie: தனுஷின் வாழ்க்கையிலே முதல் முறை.. கர திரைப்படம் செய்திருக்கும் புது சாதனை.. என்ன தெரியுமா?

Kara Movie New Record: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரின் நடிப்பில் 54வது திரைப்படமாக வெளியாகியிருப்பதுதான் கர திரைப்படம். இப்படமானது கடந்த 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இப்படமானது தனுஷின் சினிமா வாழ்க்கையில் புதிய சாதனை படைத்துள்ளதாம் .

Kara Movie: தனுஷின் வாழ்க்கையிலே முதல் முறை.. கர திரைப்படம் செய்திருக்கும் புது சாதனை.. என்ன தெரியுமா?

தனுஷ் கர திரைப்படம்

Updated On: 

01 May 2026 17:36 PM

 IST

இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில், நடிகர் தனுஷ் (Dhanush) லீட் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம்தான் கர (Kara). இதில் தனுஷிற்கு ஜோடியாக இளம் மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha baiju) நடித்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ள 3-வது படமாக கர திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்தில் செல்லி என்ற கதாபாத்திரத்தில், தனுஷின் மனைவியாக நடித்துள்ளார். இந்த படத்த்தில் தனுஷின் வேடம் முற்றிலும் வித்தியாசமாக அமைந்துள்ளது. மேலும் இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையும் சிறப்பாகவே இருக்கிறது என்று கூறலாம். இதில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார், சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

அந்த வகையில் தனுஷின் சினிமா வாழ்க்கையில் இதுவரை செய்யாத புது சாதனையை இப்படம் செய்துள்ளது. அது என்னவென்றால், தனுஷின் இந்த கர திரைப்படமானது உலகமெங்கும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் திரையிடப்பட்டுவருவதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை தனுஷின் சினிமா வாழ்க்கையில் இதுபோன்று வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரியோ ராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் டைட்டில் இதுவா? – அறிவிப்பு வீடியோ இதோ!

தனுஷின் கர திரைப்படத்தின் புது சாதனை பற்றி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தனுஷின் இந்த கர படமானது ஒரு கிராமத்து ஆக்ஷன் மற்றும் சுவாரஸ்ய கதைக்களத்தில் அமைந்துள்ளது. இப்படமானது குடும்ப எமோஷனல், பணக் கொள்ளை மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான வித்தியாசமான கதையில் அமைந்திருக்கிறது. இந்த படமானது 2026 ஏப்ரல் 30ம் தேதியில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு படத்தில் நடித்ததையே மறந்துவிட்டேன்… ரசிகருக்கு கியூட்டாக பதிலளித்த த்ரிஷா கிருஷ்ணன்

இப்படமானது வெளியாகி ஒரு நாளை கடந்துள்ள நிலையில், உலகமெங்கும் ரூ 5.5 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் கதைக்களம் அவ்வளவு எளிதாக மக்களிடையே சென்றடையவில்லை என கூறப்படுகிறது. தனுஷின் நடிப்பில் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், கட்டாயம் இப்படம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறதாக கூறப்படுகிறது.

Follow Us
Related Stories
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..