Dhanush: ‘டி55’ படத்திற்காக புது தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த தனுஷ்.. வெளியான அறிவிப்பு இதோ!
D55 Movie Update: கோலிவுட் சினிமாவில் இயக்குநராக, நாயகனாக என பல்வேறு துறைகளில் கலக்கி வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் சமீபத்தில் டி55 படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், அதனை அடுத்தாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் தனுஷ் இணையும் டி55 படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தனுஷின் டி55 பட தயாரிப்பாளர்கள்
கடந்த 2024ம் ஆண்டு வெளியான அமரன் (Amaran) என்ற படத்தை இயக்கி தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy). இவர் இப்படத்திற்கு முன் ரங்கூன் (Rangoon) என்ற படத்தை இயக்கியிருந்தாலும், இவருக்கு நிஜ கதையில் வெளியான அமரன் படமானது பல்வேறு விருதுகள் மற்றும் புகழைத் தேடித்தந்தது. இப்படத்தை அடுத்ததாக இவர் தனுஷுடன் (Dhanush) டி55 (D55) என்ற படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, பிரபல நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்பட்டுவந்தது. இப்படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கும் நிலையில், இந்த படமானது எப்படிப்பட்ட கதைக்களத்தில் தயாராகவுள்ளது என ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று 2026 ஜனவரி 22ம் தேதியில் இப்படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஆர்.டேக் ஸ்டூடியோஸ் இணைந்து டி55 படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கையில் தான் கோட் படம் உருவானது – வெங்கட் பிரபு
டி55 படம் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு :
#D55 – a grand new beginning 🌟@wunderbarfilms is happy to associate with @RTakeStudios for this massive project!
Exciting updates loading, soon!@dhanushkraja @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishzurams pic.twitter.com/36lNwOLCbn
— Wunderbar Films (@wunderbarfilms) January 22, 2026
டி55 படத்தின் கதை எப்படி என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன விஷயம் :
தனுஷின் டி55 படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பேசியசாமி, “டி55 படமானது சாதாரணமாக நமது வாழ்க்கையில் இருக்கும் மனிதர்கள் அவர்களை நாம் இதுவரைக்கு கண்டுகொண்டதே இல்லை. அவர்கள் இல்லையென்றால் நமது இயல்பு வாழ்க்கையும் இல்லாமல் போய்விடும்.
இதையும் படிங்க: மங்காத்தா படத்தை ஏன் ஒத்திவைக்க சொல்லி கேட்கவில்லை… மோகன் ஜி விளக்கம்
அதிலிருந்து ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இந்த டி55 படமானது உருவாகவுள்ளது. இதை ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், “கவனிக்கப்படாத மனிதர்களை கவனிக்கும் ஒரு படம் என ஒன் லைனாக சொல்லலாம்” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
டி55 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது :
இந்த டி55 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படத்திற்கான இடம் பார்க்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கு அனிருத் அல்லது சாய் அபயங்கர் என இரு இசையமைப்பாளர்களில் யாராவது ஒருத்தர் இசையமைப்பார் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 பிப்ரவரி அள்ளாது மார்ச் தொடக்கத்தில் துவங்கும் என வட்டாரங்கள் கூறுகிறது. இது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.