Dhanush : குபேரா படத்தின் முதல் ஷோ.. தனது மகனுடன் தியேட்டர் சென்ற தனுஷ்!
Dhanush With His Son : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் முன்னணி நடிப்பில் இன்று 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் குபேரா. இந்தப் படத்தைச் சென்னை கோயம்பேடில் உள்ள, ரோகிணி திரையரங்கில் முதல் காட்சியை, நடிகர் தனுஷ் தனது இளைய மகனுடன் சென்று பார்த்துள்ளார்.

தனுஷ் மற்றும் அவரின் மகன்
நடிகர் தனுஷின் (Dhanush) முன்னணி நடிப்பின் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa) . இந்த திரைப்படத்தைப் பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் இந்த படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன், நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), ஜிம் ஷார்ப் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் நாகார்ஜுனாவின் மனைவி ரோலில் நடிகை சுனைனாவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்தப் படமானது முற்றிலும் அரசியல் மற்றும் திரில்லர் கதைக்களம் சார்ந்து வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையமைத்திருக்கிறார். கடந்த 2024ம் ஆண்டு தொடக்கம் முதல் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தனுஷ் முடித்தார்.
அதைத் தொடர்ந்து 2025, ஜூன் 20ம் தேதியான இன்று இந்த குபேரா படமானது உலகமெங்கும் வெளியானது. இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் காட்சியைத் தனது மகனுடன் நடிகர் தனுஷ் திரையரங்கு சென்று பார்த்துள்ளார். சென்னை, கோயம்பேடு (Chennai, Koyambedu) ரோகிணி திரையரங்கிற்கு இன்று 2025, ஜூன் 20ம் தேதி குபேரா படத்தின் முதல் காட்சியை நடிகர் தனுஷ், தனது இளைய மகனுடன் சென்று பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களில் இணையத்தில் வரலாகி வருகிறது.
மகனுடன் தனுஷ் திரையரங்கில் குபேரா படத்தைப் பார்த்த வீடியோ பதிவு :
#Dhanush Watching #Kubera FDFS show in #Rohini Theater pic.twitter.com/DipsvwScz6
— Movie Scoop (@MovieScoopIndia) June 20, 2025
குபேரா திரைப்படம் எப்படி இருக்கு :
நடிகர் தனுஷின் குபேரா திரைப்படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறதாம். இந்த படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பும் மிகவும் அருமையாக இருக்கிறது. தனுஷ் நடித்திருந்த தேவா என்ற பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் தனுஷின் தேவா வேடமும் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான கேரக்டராக இந்த குபேரா படத்தில் இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநரான சேகர் கம்முலா தனது எழுத்து மற்றும் இயக்கம் மூலம் இந்த படத்தையே செதுக்கி இருக்கிறாராம்.
மேலும் நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரங்களும் இப்படத்தில் மேஜர் கதாபாத்திரங்களில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் பின்னணி இசையும் சரி, பாடல்களும் சரி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அருமையாகத் தனது பணியைச் செய்திருக்கிறாராம். மேலும் ஒட்டுமொத்தமாக இந்த குபேரா படமானது தனுஷிற்கு தேசிய விருதை வாங்கி கொடுக்கும் படமாக இருக்கும் என ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை டுவிட்டர் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.