Dhanush: வேஷ்டி சட்டை போடும்போது இருக்குற ஃபீல் – கலகலப்பாக பேசிய தனுஷ்!
Dhanush About Veshti Sattai Style: நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் கர. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் கோவையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அதில் பேசிய தனுஷ், வேஷ்டி சட்டை அணிவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

தனுஷ்
கோலிவுட் சினிமாவில் பல்வறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் நடிகர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கர (Kara). இந்த கர படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh raja) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் போர் தொழில் என்ற படத்தை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இருவரின் இயக்கத்தில் 2வது படமாக கர தயாராகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த படமானது ஒரு வித்தியாசமான திரில்லர் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் தயாராகியுள்ளது. அந்த வகையில் இதன் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே மேலும் ஆர்வத்தை அதிகரித்திருந்தகத்து.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், 2026 ஏப்ரல் 30ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது. இதன் கோவை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசிய தனுஷ், எப்போதும் வேஷ்டி சட்டையில் படத்தின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது குறித்து கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: கருப்பு படத்திலிருந்து இன்று மாலை வெளியாகும் கருப்பா கூட வா பாடல்… வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு
எப்போதும் வேஷ்டி சட்டை அணிவது குறித்து நடிகர் தனுஷ் பேசிய விஷயம்:
அந்த நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் ஒருவர், “தனுஷ் சார். ஏன் சென்னையின் நடைபெற்றிருந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நீங்கள் வேஷ்டி சட்டை அணியவில்லை? அதற்கு ஏதேனும் கரணம் இருக்கிறதா?” என கேட்டார். அதற்கு பதிலளித்த தனுஷ், “சும்மா ஒரு மாறுதலுக்காகதான் நார்மலாக உடையணிந்துவந்தேன். அதே போல ஸ்டைலாக உடையணிந்து வருவது எல்லாமே தாற்காலிகமாகதான். எப்போதுமே இதுதான் (வேஷ்டி சட்டை) நிரந்தரம். இந்த வேஷ்டி சட்டை அணியும்போது இருக்கும் ஒரு ஃபீல் இருக்கிறதல்லவா!. அது தனி ஃபீல்” என அதில் தனுஷ் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ராக்கா படத்தில் அதிரடியாக ஆக்ஷன் நாயகியாக நடிக்கும் தீபிகா படுகோன் – வைரலாகும் தகவல்
கர திரைப்படம் குறித்து தனுஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Kara trailer https://t.co/zzMM02gx4p
— Dhanush (@dhanushkraja) April 19, 2026
தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தேதியானது கிட்ட நெருங்கியுள்ள நிலையில், இப்படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த 2026ம் ஆண்டில் வெளியாகும் முதல் பிக் ஹீரோ படம் என்பதால் இப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. நிச்சயமாக தனுஷிற்கு இதுவொரு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.