4 வதந்திகளை கிளப்பி என்ன முடிச்சிடலாம்னு நெனச்சா…. ‘குபேரா’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அதிரடி

Kuberaa Audio Launch : சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1, 2025 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், நீங்கள் எவ்ளோ வேண்டுமானாலும் நெகட்டிவ் காம்பைன் பண்ணுங்க, எனக்கு பின் என் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று பேசினார்.

4 வதந்திகளை கிளப்பி என்ன முடிச்சிடலாம்னு நெனச்சா.... குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அதிரடி

குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ்

Updated On: 

01 Jun 2025 23:47 PM

 IST

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் (Dhanush), நாகர்ஜூனா (Nagarjuna), ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் குபேரா (Kuberaa). இந்தப் படம் வருகிற ஜூன் 20, 2025 அன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஜுன் 1, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனுஷ், நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில் நடிகர் தனுஷ் சற்று தாமதமாக எண்ட்ரி கொடுக்க அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதே போல நாகர்ஜூனா விழா அரங்கிற்கு நுழையும்போது அவருக்கு ரட்சகன் படத்தின் பின்னணி இசை ஒலிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தேவி ஸ்ரீ பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இளையராஜாவின் தீவிர பக்தன் நான். அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் செட் அசிஸ்டென்டாக கூட பணியாற்றுவேன். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப்ஹாப் ஆதி எல்லோரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பிலும் கவனம் செலுத்துவேன்” என்றார். மேலும் விழாவில் பேசிய ராஷ்மிகா மந்தனா, ”நான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழி வித்தியாசம் பார்க்க மாட்டேன். நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்” என்றார்.

குபேரா படம் குறித்து பேசிய தேவி ஸ்ரீ பிரசாத்

 

விழாவில் பேசிய நாகர்ஜுனா, ”தனுஷ் மிகச் சிறந்த திறமைசாலி. அவர் தேசிய, சர்வதேச அளவில் சிறந்த நடிகர். தனுஷ், சேகர் கம்முலா என்னை வைத்து எப்பொழுது மீண்டும் டைரக்ட் செய்ய போகிறீர்கள்” என பேசினார். இறுதியாக தனுஷ் மேடையேறிய போது அவரிடம் வட சென்னை 2 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், வட சென்னை 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருக்கிறது என்றார். பின்னர் பேசிய அவர், நீங்கள் என்னை சும்மா 4 வதந்திகளை உருவாக்கி என்னை முடிச்சிடலாம்னு நினைச்சா, உங்களால செங்கலை கூட புடுங்க முடியாது. நீங்கள் எவ்ளோ வேண்டுமானாலும் நெகட்டிவ் காம்பைன் பண்ணுங்க. படத்தின் வெளியீட்டுக்கு முன்னால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள்” என்றார்.

Follow Us
Related Stories
Kayadu Lohar: ஐஆம் கேம் படம் முற்றிலும் வித்தியாசமானது.. நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் – கயாடு லோஹர் பேச்சு!
Hi Movie: நயன்தாரா – கவின் நடிக்கும் ஹாய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு!
அவன் குறுக்க மட்டும் போயிடாதீங்க சார் – 4 ஆண்டுகளை நிறைவு செய்தது கேஜிஎஃப் சாப்டர் 2 படம்
சரி என்று தெரியாமல் தவறு என்று புரியாமல் எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர்பார்க்கவில்லை நான் – 19 ஆண்டுகளை நிறைவு செய்தது உன்னாலே உன்னாலே படம்
GV Prakash: ஜோ பட இயக்குநரின் புது படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்.. நடிகை யார் தெரியுமா?
புத்தாண்டை முன்னிட்டு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்
வரலாறு படைத்துள்ளீர்கள் - ஆர்தமிஸ் விண்வெளி பயணக்குழுவை பாராட்டிய டிரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் விதிக்கத் திட்டம்!!
நடுவானில் விமானத்தின் 2 எஞ்சின்களும் செயலிழப்பு.. துரிதமாக செயல்பட்டு 69 பேரை காப்பாற்றிய பைலட்!
நடிகை ஹன்சிகா தனது மைத்துனி மீது கொடுத்த புகார்