Ambikapathy : புது கிளைமேக்ஸுடன்.. ரசிகர்களைக் கவரும் தனுஷின் ‘அம்பிகாபதி’ திரைப்படம்!

Ranjanaa Movie Re-release : பான் இந்திய நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் இந்தியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் ராஞ்சனா. தமிழில் இப்படம் அம்பிகாபதி என வெளியானது. இந்நிலையில், சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு புது கிளைமேக்ஸ் காட்சிகளுடன் இப்படமானது, திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியிருக்கிறது.

Ambikapathy : புது கிளைமேக்ஸுடன்.. ரசிகர்களைக் கவரும் தனுஷின் அம்பிகாபதி திரைப்படம்!

அம்பிகாபதி திரைப்படம்

Updated On: 

01 Aug 2025 16:27 PM

பாலிவுட்டில் நடிகர் தனுஷ் (Dhanush) கதாநாயகனாக அறிமுகமான முதல் திரைப்படம் ராஞ்சனா. இந்தப் படம் தமிழில்  அம்பிகாபதி (Ambikapathy) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Aanand L. Rai) இயக்கியிருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக, நடிகை சோனம் கபூர் (Sonam Kapoor) முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் இன்று வரையிலும் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த ரஞ்சனா திரைப்படமானது மறு வெளியீடு செய்யவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

புதிய கிளைமேக்ஸ் காட்சிகளுடன் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று 2025 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இப்படமானது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், புதிய க்ளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய க்ளைமேக்ஸ் காட்சியில், தனுஷின் கதாபாத்திரம் குந்தன் இறந்துவிடுவார். ஆனால் இந்த புதிய க்ளைமேக்ஸ் (New climax) காட்சியில்  அவர் உயிருடன் இருப்பதாக காட்டப்படுகிறது.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் கிங்டம் படம்.. முதல் நாள் வசூல் விவரம்!

இணையத்தில் வைரலாகும் ரஞ்சனா படத்தின் வீடியோ :

இந்த படமானது வெளியாகி 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரீ ரிலீஸாகியிருக்கும் நிலையில், ஏதோ புதிதாக வெளியாகும் படத்தைப் போல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்களும் மீண்டும் ட்ரென்டிங்காக தொடங்கிவிட்டன என்று கூறலாம்.

இதையும் படிங்க : அதர்வாவின் தணல் படத்திலிருந்து ‘ஆசை தீயே’ என பாடல் வெளியீடு!

ரஞ்சனா படக் கூட்டணி :

ரஞ்சனா திரைப்படத்தை அடுத்ததாக, நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குநர் ஆனந்த் எல் ராயின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ராணுவ வீரராக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் அவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட வேலைகளிலிருந்து வருகிறது. இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில், வரும் 2025, நவம்பர் 27ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.