தனுஷின் குபேரா படத்திற்கு யு/ஏ கொடுத்த சென்சார் போர்டு – படக்குழு வெளியிட்ட போஸ்ட்

Kuberaa Censor Details : நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தனுஷின் குபேரா படத்திற்கு யு/ஏ கொடுத்த சென்சார் போர்டு - படக்குழு வெளியிட்ட போஸ்ட்

குபேரா

Published: 

18 Jun 2025 16:39 PM

 IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் கோலிவுட் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. காரணம் படத்தின் போஸ்டரின் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் இருந்ததுதான். இதுரை இல்லாத கெட்டப்பில் நடிகர் தனுஷ் இருப்பதை பார்த்த ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு சென்றனர். மேலும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக இதில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா (Actor Nagarjuna) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நடித்துள்ள அறிவிப்பு வெளியானது. இவர்களின் அறிமுக வீடியோவை ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது டீசர் மற்றும் ட்ரெயலர் நல்ல வரவேற்பைப்ப் எற்றது.

எதிர்பார்ப்பின் உச்சத்தில் தனுஷின் ரசிகர்கள்:

படம் வெளியாக் இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசியது இன்னும் வைரலாகி வருகின்றது. அதில் படம் சிறப்பாக வந்திருக்கு என்றும் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும். நான் அவ்வளவு நம்பிக்கையா சொல்றேன் எல்லாரும் கண்டிப்பா என்ன நம்பி இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படத்தின் ஒன் லைன் என்று ஒரு விசயம் இணையத்தில் பரவியது. அதில், நேர்மையாக இருக்கும் வருமான வரிதுறை அதிகாரியை அரசு தவறான குற்றச்சாட்டால் கைது செய்துவிடுகிறது. இதற்கு பலி வாங்க அவர் ஒரு பிச்சைகாரனை வைத்து திட்டம் தீட்டுவதுதான் கதை என்றும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படத்தின் அறிவிப்புகள் ஒவ்வென்றாக வெளியாகி வரும் நிலையில் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதனபடி படத்திற்கு யு/ஏ சான்றிதழைப் சென்சார் போர்ட் வழங்கியுள்ள நிலையில் படம் 3 மணி நேரம் 1 நிமிடம் ரன்னிங் டைம் என்றும் அறிவித்துள்ளது.

சென்சார் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

 

Follow Us
Related Stories
க்ரைம் த்ரில்லர் பாணியில் ஓடிடியில் வெளியான தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
முட்ட கலக்கி பாடலுக்கு இணைந்து நடனமாடிய அய்யனார் துணை சீரியல் நடிகர்கள் – காமெடியான வீடியோ!
சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சித்தாரே ஜமீன் பர் படத்தின் ஓடிடி உரிமையை விற்றார் அமீர் கான்
Happy Raj Movie: ‘துரு துரு’.. வெளியானது ஜி.வி.பிரகாஷ் குமாரின் ஹேப்பி ராஜ் பட செகண்ட் சிங்கிள்!
AK is Back.. துபாயிலிருந்து பாதுகாப்பாக சென்னை திரும்பிய அஜித் குமார் – இணையத்தில் பரவும் வீடியோ!
பவர் ஸ்டார் பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..