இட்லி கடை படத்திலிருந்து வெளியானது புதிய போஸ்டர் – வைரலாகும் பதிவு

Idli Kadai Movie : நடிகர் தனுஷ் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்த இட்லி கடை படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இட்லி கடை படத்திலிருந்து வெளியானது புதிய போஸ்டர் - வைரலாகும் பதிவு

இட்லி கடை

Published: 

29 Sep 2025 14:23 PM

 IST

நடிகர் தனுஷ் (Actor Dhanush)நடிப்பில் வருகின்ற 1-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்தப் படத்தை தனுஷே இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், கீதா கைலாசம், சமுத்திரகனி, பார்த்திபன் என பலர் இந்தப் படத்தில் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர். ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்த பிறகு படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றது.

அதன்படி இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஒண்டர்பார் மற்றும் டான் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைப் போல இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய போஸ்டரை வெளியிட்ட இட்லி கடை படக்குழு:

படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து நிகழ்ச்சியில் படக்குழு பேசுவது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் தனுஷின் மூன்று வித்யாசமான லுக் உள்ளது. ஒவ்வொரு லுக்கிலும் தனுஷ் ஒவ்வொரு வயதில் இருப்பது தெரிகிறது. இந்தப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களிடையே இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Ajith Kumar: தமிழ் சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.. ரேஸ் களத்தில் அஜித் பேச்சு!

இட்லி கடை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜூனியர் என்டிஆரின் தேவாரா 2 படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு