Idli Kadai: அது கடையில்ல இந்த ஊரோட அடையாளம்.. வெளியானது தனுஷ் – நித்யா மேனனின் ‘இட்லி கடை’ பட ட்ரெய்லர்!

Dhanushs Idli Kadai Trailer: தமிழில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பன்முக தன்மை கொண்டவர் தனுஷ். இவரின் இயக்கத்திலும், முன்னணி நடிப்பிலும் வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் படம் இட்லி கடை. அசத்தல் கிராமத்து கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்திய வைரலாகி வருகிறது.

Idli Kadai: அது கடையில்ல இந்த ஊரோட அடையாளம்.. வெளியானது தனுஷ் - நித்யா மேனனின் இட்லி கடை  பட ட்ரெய்லர்!

இட்லி கடை பட ட்ரெய்லர்

Published: 

20 Sep 2025 19:14 PM

 IST

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா (Kuberaa). இந்த படமானது வரும் 2026ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிப்பின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் இயக்குநராகவும் படங்களை இயக்கிவருகிறார். அந்த வகையில், இவரின் இயக்கத்தில் 4வதாக உருவாகியிருக்கும் படம்தான் இட்லி கடை (Idli kadai). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menen) நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் அருண் விஜய் (Arun Vijay), ராஜ்கிரண், சமுத்திரக்கனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

கிராமத்து கதையுடன் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக, இட்லி கடை படமானது தயாராகியுள்ளது. இப்படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இதை முன்னிட்டு இன்று 2025 செப்டம்பர் 22ம் தேதியில் இட்லி கடை படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : 2026 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தனுஷின் குபேரா.. ரசிகர்கள் ஹேப்பி!

தனுஷின் இட்லி கடை படக்குழு வெளியிட்ட ட்ரெய்லர் பதிவு

தனுஷின் இட்லி கடை ப்ரீ புக்கிங் எப்போது தொடங்கும்?

நடிகர் தனுஷின் இந்த இட்லி கடை படத்தை, டான் பிக்ச்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்திலிருந்து, இதுவரை கிட்டத்தட்ட 3 பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படிங்க : மீண்டும் நெட்பிளிக்ஸில் வெளியான ‘குட் பேட் அக்லி’… படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

தனுஷின் இப்படமானது ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, வரும் அக்டோபர் 1 ஆம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் வரும் 2025 செப்டம்பர் 28ம் தேதி முதல் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இந்த இட்லி கடை படமானது தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இட்லி கடை படத்தின் பட்ஜெட்

தனுஷின் 52வது படமாக இட்லி கடை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தனுஷ் இயக்கி, அவரே முன்னணி ஹீரோவாக நடித்து மற்றும் அவரின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த இட்லி கடை படமானது மிகவும் பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாகியிருப்பதாக, நடிகர் அருண் விஜய் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அதைபோல, இப்படமானது கிராமம், குடும்பம் மற்றும் காதல் போன்ற மாறுபட்ட கதையில் உருவாகியுள்ளது. இந்த படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.