Kara Movie: அதிரடி ஆக்ஷன் திரில்லர்..வெளியானது தனுஷின் ‘கர’ படத்தின் கிளிம்ப்ஸ்!
Dhanushs Kara Movie Glimpse: பான் இந்திய சினிமா பிரபலங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் படம் கர. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கர படத்தின் கிளிம்ப்ஸ்
நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல்வேறு கதைக்களங்களில் படங்கள் தயாராகிவருகிறது. இதன் ஒரு பகுதியாக “போர் தொழில்” (Por Thozhil) என்ற படத்தின் மூலம் பிரபலமான, இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த படம் டி54 (D54) என அழைக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று 2026 ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் வெளியாகியிருந்தது. “கர” (Kara) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அதிரடி ஆக்ஷன் கிராமத்து கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாகத்தான் தனுஷிற்கு முதன்முறையாக ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படமானது கிராமத்து ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இந்த படமானது விரைவில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இப்படத்தின் முதல் கிளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது தனுஷின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: சூர்யாவின் ரசிகர்களே.. அதை தவிர்த்து கருப்பு படத்திலிருந்து இனி எந்த அப்டேட்டும் வராது?- ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
தனுஷின் கர திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோ பதிவு :
#TheNameIsKara is out now 🧨
🔗 https://t.co/bAKPNGOZh0#Kara #கர #కర #करा
— G.V.Prakash Kumar (@gvprakash) January 15, 2026
இந்த கர படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் மமிதா பைஜூ, சூராஜ் வெஞ்சராமூடு, கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார், ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அருமையாக வந்துள்ளதாம்.
இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவராக ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இந்த படமானது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.