தனுஷ் 55 படத்தில் இணையும் பிரபல நடிகை… அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Dhanush 55 Movie New Update: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உறுவாக உள்ள படத்தை தற்காலிகமாக தனுஷ் 55 என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் நடிக்க உள்ள முக்கிய நடிகர் குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

தனுஷ் 55 படத்தில் இணையும் பிரபல நடிகை... அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

தனுஷ் 55

Published: 

02 Feb 2026 12:27 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தேரே இஸ்க் மெய்ன் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 54-வது படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் ராஜா உடன் இணைந்தார். அதன்படி இயக்குநர் விக்னேஷ் ராஜா முன்னதாக போர் தொழில் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் கூட்டணி வைத்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்தப் படத்திற்கு கர என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷ் தனது 55-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் தனுஷ் 55 படத்தில் உள்ள படக்குழுவினர் குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

தனுஷ் 55 படத்தில் இணையும் பிரபல நடிகை:

அதன்படி முன்னதாக இந்தப் படத்திற்கு இசையமைக்க இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் தனுஷின் தீவிர ரசிகர் என தன்னை கூறிக்கொள்ளும் சாய் நிச்சயமாக சிறப்பாக இந்தப் படத்திற்கு இசையமைப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நிலையில் தற்போது எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் மற்றொரு நடிகை இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த நடிகை யார் என்று உங்களுக்கு தெரியும் ஆனால் அவரின் கதாப்பாத்திரம் தெரியுமா என்று படக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

Also Read… பராசக்தி படத்திலிருந்து வெளியானது நமக்கான காலம் பாடல் வீடியோ!

தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆரி அர்ஜுனனின் ஃபோர்த் ஃப்ளோர் படத்திற்கு சென்சார் என்ன தெரியுமா?

ரூ.15 லட்சம் செலவுசெய்து வளரப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு சென்ற இந்திய தம்பதி
அசாமில் 80 மீட்டர் பாலத்தை உருவாக்கிய அசாம் இளைஞர்
மரணத்திற்குப் பின்னும் வாழ்க்கை உண்டா? மரணத்தை வெல்ல நிபுணர்கள் முயற்சி
உருவாகிறது ரஜினிகாந்தின் பயோபிக்.. இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?.. வந்தது குட்நியூஸ்!!