Bigg Boss Tamil: தமிழில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!
Most Hated Bigg Boss Contestant: இந்தியாவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழில் இதுவரை 8 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டநிலையில், விரைவில் சீசன் 9 தொடங்கவுள்ளது. இந்நிலையில் இதுவரை வெளியான சீசன்களில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டப் போட்டியாளர் யார் என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ்
உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுப்பாளராக, கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பப்பட்டுவந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil). தமிழில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களாக வெளியாகியிருக்கிறது. தமிழ் மக்களிடையே ஆண்டுதோறும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். கடந்த 2023ம் ஆண்டுவரை வெளியான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிவரை கமல்ஹாசன் தொகுத்திருந்தார். அதன்பின் அரசியல் மற்றும் சினிமா வேலைகள் காரணமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொகுக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் தொகுக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுவரை வெளியான 8 சீசன்களில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட போட்டியாளர் யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க. இதுவரை வெளியான பிக்பாஸ் தமிழ் 8 சீசன்களில் அதிகம் வெறுக்கப்பட்ட போட்டியாளராக நடிகை ஐஸ்வர்யா தத்தா (Aishwarya Dutta) கூறப்படுகிறார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த பியானோ.. எஞ்சாமி பாடலின் நியூ வெர்சனை இசைத்த ஜி.வி.பிரகாஷ்!
ஐஸ்வர்யா தத்தாவை மக்கள் அதிகம் வெறுக்க காரணம் என்ன:
நடிகை ஐஸ்வர்யா தத்தா, கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க்போது, அவர் நடிகர் தாடி பாலாஜியை அவமானப்படுத்தியிருந்தார். அவர்மீது குப்பைகளை கொட்டி, அவரின் மனதை புண்படுத்துவும் விதமாக நடந்துகொண்டார். இந்த சம்பவமானது, அப்போதே மக்களிடையே பாரும் விமர்சனங்களுக்குள்ளானது.
இதையும் படிங்க: புதிய அணியுடன் அஜித்.. ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்பு
மேலும் இந்த காரணமாக இவருக்கு இருந்த ரசிகர்கள் கூட, தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின், மதுமிதா மற்றும் அபிராமி போன்ற போட்டியாளர்களும் மக்களிடையே கடுமையான விமர்சனங்களை பெற்ற போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு:
இந்த சீசன்களை தொடர்ந்து, இந்த 2025ம் ஆண்டில் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுக்கும் நிலையில், பல்வேறு போட்டியாளர்கள் பங்குபெறவுள்ளனர்.
மேலும் இந்த சீசனில் அதிகம் இன்ஸ்டாகிராம் பிரபலங்களும் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது வரும் 2025 அக்டொப்பர் 5ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. அக்டோபர் 5ம் தேதியில் மாலை 6 மணி முதல் நிகழ்ச்சியானது தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.