அமேசான் ப்ரைம் வீடியோவில் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் சீரிஸ் தஹாத்
Dahaad Web Series: ஓடிடியில் தொடர்ந்து படங்களுக்கு ரசிகர்களிடையே எப்படி நல்ல வரவேற்பு இருக்கிறதோ அதே போல வெப் சீரிஸ்களுக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்த வகையில் இந்தியில் உருவாகி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இணையதள தொடரான தஹாத் சீரிஸ் குறித்து தற்போது பார்க்கலாம்.

தஹாத்
நடிகை சோனாக்சி சின்ஹா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த 12-ம் தேதி மே மாதம் 2023-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியான இணையதள தொடர் தான் தஹாத். இந்த தஹாத் என்ற இணையதள தொடரை இயக்குநர்கள் ரீமா காக்டி மற்றும் ருச்சிகா ஓபராய் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்த நிலையில் இந்த சீரிஸிற்கான திரைக்கதையை ரீமா காக்டி, ரித்தேஷ் ஷா, ஜோயா அக்தர் மற்றும் ஜித்தின் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்த தொடரில் நடிகை சோனாக்ஷி சின்ஹா உடன் இணைந்து நடிகர்கள் குல்ஷன் தேவையா, விஜய் வர்மா, சோஹும் ஷா, ஜோ மொரானி, கரன் மாரு, மைக்கேல் காந்தி, ஜெயதி பாட்டியா, கவிராஜ் லைக், மன்யு தோஷி, யோகி சிங்க, சங்கமித்ரா ஹிதாஷி, ராஜீவ் குமார், ரத்னபாலி பட்டாச்சார்ஜி, நிர்மல் சிரானியா, விஜய் குமார் டோக்ரா, அபிஷேக் ரஹ் அலேராவ், அபிஷேக் பலேராவ் பட்நாகர், அங்கூர் வர்மா என பலர் நடித்து இருந்தனர்.
மேலும் இந்த தஹாத் என்ற இணையதள தொடரை பிரபல தயாரிப்பு நிறுவனங்களான எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் டைகர் பேபி பிலிம்ஸ் ஆகியவை சார்பாக தயாரிப்பாளர்கள் ரித்தேஷ் சித்வானி, ஜோயா அக்தர், ரீமா காக்டி, ஃபர்ஹான் அக்தர், காசிம் ஜக்மாகியா, அங்கத் தேவ் சிங் மற்றும் சுனிதா ராம் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர்.
தஹாத் இணையதள தொடரின் கதை என்ன?
மொத்தமாக 8 எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடர் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மண்டாவா என்ற பகுதிக்கு சப் இன்ஸ்பெக்டராக வருகிறார் நடிகை சோனாக்ஷி சின்ஹா. அந்த மாநிலத்தை சுற்றிலும் மொத்தம் 27 பெண்கள் தொடர்ந்து எந்தவிதமான தடையமும் இன்றி காணாமல் போன வழக்கை எடுத்து விசாரிக்கிறார்.
இந்த வழக்கை விசாரிக்கும் போது இந்த பெண்கள் தொடர்ந்து காணாமல் போய் இறந்து சடலமாக கிடைக்கின்றனர். இந்த எல்லா வழக்குகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த சோனாக்ஷி இது ஒரு சீரியல் கில்லரால் நிகழ்த்தப்படும் குற்றம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
Also Read… அது என் சின்ன வயசு கனவு… எமோஷ்னலாக பேசிய ராம் சரண்
காணாமல் போன பெண்களிடையே ஒரு மாதிரியான ஒற்றுமையாக உள்ள விசயம் அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், 25 வயதுக்கு மேல் ஆகியும் வறுமை மற்றும் வரதட்சணை கொடுக்க முடியாத காரணத்தால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருப்பவர்கள் என்பதுதான்.
தொடர்ந்து தங்களது காதலருடன் சென்ற அந்தப் பெண்கள் அனைவரும் காணாமல் போன அடுத்த நாளே சைனைட் சாப்பிட்டுவிட்டு உயிரிழந்ததையும் கண்டுபிடிக்கிறார். தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் சோனாக்ஷி இறுதியில் அந்த கொலைகாரனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே இந்த தொடரின் கதை.