வகைவகையான சொகுசு கார்கள்.. துல்கர் – பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை சோதனை!

Dulquer Salmaan and Prithviraj Sukumaran: கேரளாவில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பிரீமியம் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோரின் வீடுகளில் சுங்கத்துறை சோதனை செய்துள்ளது. இந்த செய்தி தற்போது வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வகைவகையான சொகுசு கார்கள்.. துல்கர் – பிரித்விராஜ்  வீடுகளில் சுங்கத்துறை சோதனை!

துல்கர் சல்மான் - பிரித்விராஜ் சுகுமாரன்

Updated On: 

23 Sep 2025 13:02 PM

 IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர் நடிகர்கள் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan) மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் (Actor Prithviraj Sukumaran). வாரிசு நடிகர்களாக மலையாள சினிமாவில் இவர்கள் அறிமுகம் ஆகி இருந்தாலும் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். மேலும் நடிகர்களாக மட்டும் இன்றி தயாரிப்பாளர்களாகவும் சினிமாவில் வலம் வருகின்றனர். அதன்படி நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான லோகா சாப்டர் 1 சந்திரா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதியாக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கு சினிமாவில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பான் இந்திய அளவில் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதே போல நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான எம்புராம் 2 படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அவரே இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… இளைஞர்கள் நிச்சயமா வாழ்க்கை பற்றி மேனிஃபெஸ்ட் பண்ணனும் – தனுஷ் கொடுத்த அட்வைஸ்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பிரீமியம் வாகனங்கள் மீது நடவடிக்கை:

இந்த நிலையில் கேரளாவில் சட்டவிரோதமாக கேரளாவில் இறக்குமதி செய்யப்பட்ட பிரீமியம் வாகனங்கள் மீது சுங்கதுறை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அந்த வகையில் கேரளாவில் 30 இடங்களில் சுங்கதுறை சோதனை நடத்தி வரும் நிலையில் இன்று நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் வீட்டில் சுங்கதுறை சோதனை நடத்தி வருகின்றது.

அதன்படி கொச்சியின் பனம்பள்ளி நகரில் உள்ள துல்கரின் வீட்டிலும், தேவார மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பிருத்விராஜின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்தவித கார்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… நான் ஒரு கதையை சொல்லி அத பிடிக்கலனு எந்த நடிகரும் சொன்னது இல்ல – இயக்குநர் அட்லி