Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!

Actor Super Good Subramani Passed Away | தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூப்பர் நடிகர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!
சூப்பர் குட் சுப்பிரமணி
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 May 2025 20:48 PM

சென்னை, மே 10 : தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 58 ஆகும். புற்றுநோயால் பாதிகப்பட்டு இருந்த அவர், கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் இன்று ( மே 10, 2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் கலக்கிய சூப்பர் குட் சுப்பிரமணி

தமிழ் சினிமாவின் குணசித்திர கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. சினிமாவில் 30 ஆண்டுகளாக நடித்து வந்த இவர், தமிழில் பரியேறும் பெருமாள், பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் உண்மையான பெயர் சுப்பிரணியாக உள்ள நிலையில், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதன் காரணமாக இவர் சூப்பட் குட் சுப்பிரமணி என அழைக்கப்பட்டு வந்தார்.

சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்

புற்றுநோயால் தவித்து வந்த சூப்பர் குட் சுப்பிரமணி

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் புற்றுநோயின் 4வது கட்டத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வந்தார். இதற்கிடையே கடமை உணர்ச்சியுடன் தான் கடைசியான நடித்த பரமன் திரைப்படத்தின் டப்பிங்கிலும் அவர் பங்கேற்றார். அப்போது மிகவும் உடல் மெலிந்த நிலையில் இருந்த சூப்பர் குட் சுப்பிரமணியை பார்த்து அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று ( மே 10, 2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு செய்து திரைத்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!
சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!...
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!
சம்பளத்தை வச்சிகோங்க.. தேசியப் பாதுகாப்பு நிதி வழங்கிய இளையராஜா!...
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!
'இந்தியன் 2' படம்.. மாறிய பிளான்.. எஸ்.ஜே சூர்யா வருத்தம்!...
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!
ஸ்ரீநகரில் வெடிசத்தங்கள்! ஜம்மு காஷ்மீர் முதல்வர் கண்டனம்..!...
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!
இந்தியாவிற்கு ஆதரவு.. ஆமிர் கான், சைஃபை கொண்டாடும் இந்தியர்கள்..!...
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!
போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான்!...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கும் தலைவர்கள்!...
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?
கோடையில் தயிர் ஏன் விரைவாக கெட்டுப்போகிறது? தடுப்பது எப்படி..?...
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!
நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நல குறைவால் காலமானார்!...
அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்..?
அடுத்த வாரம் முதல் மீண்டும் ஐபிஎல்... பிசிசிஐ புதிய திட்டம்..?...
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் - இந்திய ராணுவம் விளக்கம்!
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் - இந்திய ராணுவம் விளக்கம்!...