நான் அந்த நடிகரை பார்த்துதான் அதையெல்லாம் கத்துக்கிட்டேன்- சியான் விக்ரம் ஓபன் டாக்!
Vikram Style Inspiration: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியான விக்ரம். இவர் சினிமாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் உத்வேகமாக இருந்த நடிகர் யார் என்பது குறித்து முன்பு ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

சியான் விக்ரம்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சியான் விக்ரம் (Chiyaan Vikram). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்த மிக பிரம்மாண்டமான படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் வீர தீர சூரன் (Veera Dheera Sooran). இப்படமானது கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சியான் விக்ரம் அதிரடி ஆக்ஷ்ன் வேடத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பில் வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்தாக சியான்63 (Chiyaan63) மற்றும் சியான்64 (Chiyaan64) போன்ற படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படங்கள் 2026ல் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அந்த வகையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நடிகர் சியான் விக்ரம், அதில் தமிழ் சினிமாவில் தனது ஸ்டைலுக்கு உத்வேகமாக இருந்த நடிகர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த நடிகர் வேறுயாருமில்லை ரஜினிகாந்த் தான் (Rajinikanth).
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.. நடந்தது என்ன?
நடிகர் சியான் விக்ரமின் இன்ஸ்டாகிராம் பதிவு :
தனக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து சியான் விக்ரம் பேச்சு
அண்ட் நேர்காணலில் நடிகர் சியான் விக்ரம், “நான் முதல் திரைப்படத்தில் நடிக்கும்போது எனக்கு ஸ்டைல் சுத்தமாக வராது. நான் புது ஸ்டைல் கொண்டுவருவதற்கு நிறைய முயற்சி செய்வேன். எனக்கு தொடக்கத்தில் அப்படியே தெலுங்கு படங்களின் ஸ்டைல்தான் வந்தது. அதன் பிறகு நான் சூப்பர் ஸ்ட்ராங் ரஜினிகாந்த் சாரைப் பார்த்துதான் மிகவும் உத்வேகமானேன். அவர் சினிமாவில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிச்சிருக்காரு. அவரு என்ன பண்ணாலும் வித்தியாசமான ஸ்டைலில் இருக்கும்.
இதையும் படிங்க: அந்த படம் பார்த்தபோது என்னை உறையவைத்தது- மனம் திறந்த மாரி செல்வராஜ்!
அவரின் அந்த ஸ்டைல் அவர் நடித்திருக்கும் கதாபாத்திரங்களை எந்தவிதத்திலும் பாதிக்காத வண்ணத்தில் இருக்கும். அவரின் ஸ்டைலில் அவ்வளவு மாற்றம் இருக்கும். அவரால் மட்டுமே அந்தமாதிரியாக பண்ணமுடியும். அதை பார்க்கும்போது எனக்கு தெரியும், அவரை போல என்னால பண்ணமுடியாது என்று, ஆனாலும் நான் ட்ரை பண்ணுவேன். படத்தின் காட்சியில் சும்மா நடந்துவரும்போது, காரில் இருந்து இறங்கும்போது என ரஜினிகாந்த் சார் ஸ்டைலில் நானும் செய்துபார்ப்பேன்” என விக்ரம் வெளிப்படையாக பேசியிருந்தார்.