நடிகர் ராஜேஷ் மறைவு… ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் பலர் இரங்கல்

Actor Rajesh: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான நடிகர் ராஜேஷ் இன்று காலமானார். இந்த இழப்பு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு ரஜினிகாந்த், ராதிகா என பிரபலங்கள் பலரும் ரசிகர்களும் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராஜேஷ் மறைவு... ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் பலர் இரங்கல்

ரஜினிகாந்த் உடன் நடிகர் ராஜேஷ்

Updated On: 

30 May 2025 11:25 AM

 IST

தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகர் ராஜேஷ் (Actor Rajesh) இன்று 29-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு தனது 75-வது வயதில் காலமானார். 1974-ம் ஆண்டு சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன நடிகர் ராஜேஷ் நாயகன், வில்லன், குணச்சித்திரம் என பல கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அண்ணனாகவும், அப்பாவாகவும் பல படங்களில் நடித்துள்ளார். வயது மூப்பின் காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து பல நடிகர்கள் விலகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் சிலர் தங்களது வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ராஜேஷ் கடந்த 2024-ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்திலும் அவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி தான் உயிரிழக்கும் வரை சினிமாவில் நடிகராக வலம் வந்துள்ளார் ராஜேஷ். இந்த நிலையில் இன்று தனது வயது மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். அவரது இழப்பு குடும்பத்தினர் மட்டும் இன்றி திரையுலத்தினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கல் பதிவை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் பதிவு:

அதனைத் தொடர்ந்து நடிகை ராதிகா வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளதாகவது, நடிகர் ராஜேஷின் திடீர் மறைவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பல படங்களில் நாங்க ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம். சினிமா குறித்தும் வாழ்க்கை குறித்தும் ஆழ்ந்த அறிவு கொண்டவர் அவர். அவரை ஒரு குடும்பதினராகவும், நண்பராகவும் சக நடிகராகவும் அதிகமாக மிஸ் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

மேலும் தயாரிப்பாளர் தனஞ்ச்ஜெயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் நடிகர் ராஜேஷின் மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் மிகவும் மரியாதைக்குரிய நபராம சினிமாவில் இருந்தார் என்று தெரிவித்த அவர் ராஜேஷின் முடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தள பதிவு:

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..