பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்டம்… வைரலாகும் போட்டோஸ்!
Celebrities Diwali Celebration: இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி பண்டிகைக்கு ஒவ்வொரு கதைகள் சொல்லப்படும். ஆனால் இறுதில் அனைவருக்கும் பிடித்த ஒன்று கொண்டாட்டம். நண்பர்கள் உறவினர்கள் அனைவரும் இணைந்து பண்டிகையை கொண்டாடுவதே சிறப்பான விசயமாக உள்ளது.

பிரபலங்கள்
இன்று உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி புத்தாடைகள் உடுத்தி வண்ணமயமான பட்டாசுகளை வெடித்து மிகவும் மகிழ்ச்சியாக தங்களது தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து மக்கள் தங்களது கொண்டாட்டங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது போல பிரபலங்களில் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர். இதனைப் பார்த்து ரசிகர்கள் தங்களது தீபாவளி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமா உட்பட இந்திய சினிமாவில் உருவாகி வரும் புதுப் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இதுர் அசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகி வரும் முன்னணி நடிகர்களின் படங்களில் அப்டேட்களை படக்குழு இன்று வெளியிட்டு வருகின்றது. அதன்படி நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மகுடம் படத்தின் 2-வது லுக், நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வீடியோ, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி படத்தின் புதிய அறிவிப்பு என பல தகவல்கள் இன்று புதிதாக வெளியாகி ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பதிவுகள் மட்டும் இன்று பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்:
நடிகர்கள் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியனின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்:
ஜிவி பிரகாஷ் குமாரின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்:
Also Read… சூர்யா 46 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பிரபல நடிகரின் மகன்
சமந்தாவின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படம்:
Also Read… விஜய், அஜித், சிவகார்த்திகேயன் யாருடன் மீண்டும் படம் நடிப்பீங்க? வித்யுத் ஜம்வால் சொன்ன விசயம்