Janhvi Kapoor: பாலிவுட் நடிகை ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
Janhvi Kapoor Marriage Rumors: பாலிவுட் நடிகையும், தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் மகளுமாக இருந்துவருபவர் ஜான்வி கபூர். இவர் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் லீட் நாயகியாக நடித்து அசத்திவரும் நிலையில், இவருக்கு விரைவில் திருமணம் நடப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.

நடிகை ஜான்வி கபூர்
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் லீட் நடிகையாக இருந்து, டோலிவுட் மற்றும் பாலிவுட் போன்ற சினிமாவிலும் உச்சம் பெற்றிருந்தவர்தான் நடிகை ஸ்ரீதேவி (Sridevi). இவர் எந்த அளவிற்கு இந்தி சினிமாவில் பிரபலமோ, அதுபோலவே இவரின் மகள் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor), தற்போது லீட் நடிகையாக உருவெடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இந்தி சினிமாவை கடந்து, தெலுங்கு சினிமாவிலும் படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தெலுங்கில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் பெடி (Peddi). இப்படத்தில், டோலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் ராம் சரணுக்கு (Ram Charan) ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், நடிகை ஜான்வி கபூருக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாக இணையத்தில் தகவல்கள் பரவிவருகிறது. இதுகுறித்து அவரின் தந்தை போனி கபூர் விளக்கம் கொடுத்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி இறுதியாக என்னிடம் கேட்டது… ரஜினிகாந்த் சொன்ன விசயம்
தொழிலதிபரை திருமணம் செய்யும் ஜான்வி கபூர்:
தற்போது இந்தி சினிமாவில் இளம் நடிகையாக மிகவும் பிரபாலமானவராக இருந்துவருபவர் ஜான்வி கபூர். இவர் கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன பக்கம் ஈர்த்துவருகிறார். அந்த வகையில் இவர் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இதற்கு ஜான்வி கபூரின் தந்தை, போனி கபூர் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் மகேஷ் பாபுவின் வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட சிக்கல் – என்ன ஆச்சு தெரியுமா?
அவர் பேசுகையில், “எனது மகளின் திருமணம் தொடர்பாக பரவும் தகவல்களில் உண்மை இல்லை. யாரும் அதனை நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், அவர் ஜான்வி கபூரின் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஜான்வி கபூரின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
நடிகை ஜான்வி கபூர், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருந்துவரும் இலையில் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும் ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இவருக்கு தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலே தொடர்ந்து படங்கள் அமைந்துவருகிறது. இவர் ராம் சரணின் பெடி படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிலையில், அதிரடி ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் படமாக தயாராகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில், வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.