சர்ச்சைக்குரிய ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பாடல் – சந்தானத்தின் மீது பாஜகவினர் புகார்
DD Next Level : ஆர்யா தயாரிப்பில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக நடிகர் சந்தானத்தின் மீது பாஜகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

நடிகர் ஆர்யாவின் (Arya) தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் (Santhanam) ஹீரோவாக நடித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படம் வருகிற ஜூன் 16, 2025 அன்று திரைக்குவரவிருக்கிறது. அன்றைய தினம் சூரி (Soori) ஹீரோவாக நடித்துள்ள மாமன் மற்றும் யோகி பாபு முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஜோரா கைய தட்டுங்க போன்ற படங்களும் வெளியாகின்றன. சந்தானம், சூரி, யோகி பாபு ஆகியோர் தமிழ் சினிமாவில் காமெடியன்களாக இருந்து ஹீரோவானவர்கள். மூன்று பேர் படங்களும் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. விலங்கு வெப் தொடருக்கு பிறகு பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் என்பதால் சூரியின் மாமன் படத்துக்கும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கௌதம் மேனன் குறித்து சிம்பு கமெண்ட்
Paavoom ya manusan 😭🤣 pic.twitter.com/oLH2SxwA5M
— Atman! (@Atman_Fx) May 6, 2025
எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பிரபல இயக்குநர்கள் செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாடலுக்கு கௌதம் மேனனும் யாஷிகா ஆனந்த்தும் நடனமாடியிருக்கும் காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் பட விழாவில் பேசிய நடிகர் சிம்பு, ‘எங்க டைரக்டர் கௌதம் மேனனை என்னடா பண்ணி வச்சிருக்கீங்க. உங்களை சும்மா விடமாட்டேன்’ என கலகலப்பாக பேசியிருந்தார்.
சந்தானத்தின் மீது புகார்
இந்த நிலையில் நடிகர் சந்தானத்தின் மீது பாஜக வழக்கறிஞர்கள் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் எனவே படத்தை தடைவிதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வெளியாவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கிஸ்ஸா என்ற பாடலில் தான் ஸ்ரீநிவாசா கோவிந்தா என்ற பெருமாள் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஆஃப்ரோ இசையமைத்துள்ள இந்த பாடலை கெயித்தி எழுதியுள்ளார். டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் பாதிக்குமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.