பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில் இத்தனை வசதிகளா? வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 9: தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9
இந்தி சினிமாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சி இந்தி சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஒளிபரப்பானது. இது தமிழ் மக்களுக்கு பிடிக்குமா என்று ஒரு கேள்வி இருந்த நிலையில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தியில் பிரபல நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் தமிழில் பிரபல நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதல் சீசன் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 9-வது சீசனை எட்டியுள்ளது.
தொடர்ந்து 7 சீசன்களாக கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது 8-வது சீசன் முதல் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் நாளை அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் நிகழ்ச்சி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வீடு இப்படி இருக்கா?
பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் தொடங்கியதில் இருந்தே இந்த வீடு எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அந்த வகையில் ஒவ்வொரு சீசனிலும் வீட்டின் அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அந்த வீட்டின் அழகைப் பார்க்க ரசிகர்கள் எப்போது ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் வீடு எப்படி இருக்கிறது என்பது குறித்து வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் பிக்பாஸ் 9 வீட்டின் வீடியோ:
BB9 House Updates:
– Jacuzzi (Small Bath tub)
– 1 House
– Animals vs Birds conceptPakka pakka than puriyum poga poga than theiryum 😄
One of the less hype season of all time🙃#BiggBossTamil9 #BiggBoss9Tamil
pic.twitter.com/qr8PBRfCF5— Ahamed Inshaf (@InshafInzz) October 4, 2025
Also Read… இரண்டாவது முறையாக தேசிய விருது வென்ற ஜிவி பிரகஷ்… சூப்பரான கிஃப்ட் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்