பிக்பாஸில் வித்யாசமாக நடைபெறும் இந்த வார எவிக்ஷன்… கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் வீடியோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசனில் இதுவரை எந்த சீசனிலும் நடைபெறாதது போல இந்த சீசனில் வித்யாசமான முறையில் எவிக்ஷன் நடைப்பெற்று வருகின்றது. அந்த எவிக்ஷனைப் பார்த்த போட்டியாளர் சாண்ட்ரா கதறி அழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது 9-வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் வாரம் வாரம் வீட்டை விட்டு வெளியேற்றுவார்கள். மக்களிடம் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 49-வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து இந்த சீசன் தொடங்கி 7-வது வாரம் இறுதியை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் ஒருவர் நிச்சயமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் மொத்தமாக 16 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நாமினேஷன் புராசசில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து எவிக்ஷன் இருக்கும் என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல ஒவ்வொரு வாரமும் யாரும் எதிர்பாராத விதமாகவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷன் நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த வாரம் இதுவரை எப்போதும் இல்லாத ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ஷன் நடைப்பெற்று உள்ளது.
பிக்பாஸில் வித்யாசமாக நடைபெறும் இந்த வார எவிக்ஷன்:
அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் எவிக்ஷனில் இறுதியாக கெமி மற்றும் பிரஜின் ஆகியோர் இருக்கிறார்கள். அதன்படி இவர்கள் இருவரும் இரண்டு கார்களில் கண்களை கட்டி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தனது கணவர் வெளியேற்றப்படுவார் என்ற பயத்தில் சாண்ட்ரா கதறி அழும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day49 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/c2Xc7iw3KG
— Vijay Television (@vijaytelevision) November 23, 2025
Also Read… சூர்யா- ஜோதிகாவுக்கு தூது போவதே என் வேலையா இருந்தது – கலகலப்பாக பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா!