பிக்பாஸில் என்னோட காம்பெடிஷன் இவர் தான் – பார்வதி சொன்னது யார் தெரியுமா?
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 43-வது நாளை எட்டியுள்ளது. நாட்கள் செல்ல செல்ல ஆட்டமும் தொடர்ந்து சூடுபிடித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடிற்கான புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 43-வது நாளை எட்டியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய போது வீட்டில் உள்ளே 20 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் 4 பேர் என மொத்தம் 24 போட்டியாளர்கள் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து இந்த சீசனில் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மொத்தம் 16 போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸில் போட்டியாளர்களாக உள்ளனர். மேலும் கடந்த வார எவிக்ஷனின் வாட்டர்மெலன் ஸ்டார் என்று அழைக்கப்படும் திவாகர் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து எவிக்டாகி வெளியே அனுப்பப்பட்டார். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக இவரது எவிக்ஷன் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்து தற்போது 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு தினமும் 3 முதல் 4 புரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் இந்த சீசனில் திவாகர் வீட்டில் இருந்து எவிக்டாவது குறித்து புரோமோ வீடியோவிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி குழு அறிவித்தது ரசிகர்களிடையே வியப்பை ஆழ்த்தியது. இதுவரை இப்படி எந்த ஒரு எவிக்ஷனும் வெளிப்படையாக காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸில் இன்று இதுதான் டாஸ்க் – வைரலாகும் வீடியோ:
இந்த நிலையில் இன்று 43-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வீட்டில் யார் யாரை போட்டியாளராகவும் யார் யாரை ஒரு ஆளாக கூட நினைக்கவில்லை என்றும் கூற வேண்டும் என்று பிக்பாஸ் ஒரு டாஸ்கை வழங்கியுள்ளார்.
அதன்படி இந்த டாஸ்கில் பேசிய பார்வதி இந்த வீட்டில் தனது போட்டியாளராக எஃப்ஜேவை பார்ப்பதாகவும், அவர் தன்னுடைய ஆண் வெர்ஷனாக இருப்பதாகவும் பார்வதி தெரிவித்தார். தொடர்ந்து வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களும் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளது அந்த வீடியோவைப் பார்க்கையில் தெரிகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day43 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/vItXqCVl8d
— Vijay Television (@vijaytelevision) November 17, 2025
Also Read… மழைக்கு கோரிக்கை வைத்த நடிகர் ஆர்யா… வைரலாகும் போஸ்ட்!