தண்ணீருக்காக பிக்பாஸ் வீட்டில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் ஆதிரை – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே சண்டை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை சரியாக செய்யாத சபரி மற்றும் கம்முருதின் உடன் மற்றப் போட்டியாளர்கள் சண்டையிடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தண்ணீருக்காக பிக்பாஸ் வீட்டில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் ஆதிரை - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

09 Oct 2025 17:00 PM

 IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு தொடங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 போட்டியாளர்கள் தற்போது வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டும் இன்றி இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வைல்கார்ட் போட்டியாளர்கள் சிலர் உள்ளே செல்லவும் உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய அன்று இரவே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இடையே சண்டை தொடங்கிவிட்டது. தொடர்ந்து இந்த சண்டை அடுத்த அடுத்த நாட்களுக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அமைதியாக இருந்த போதிலும் தற்போது அவர்களும் சண்டையிடத் தொடங்கியுள்ள வீடியோ இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்‌ஷன் நாமினேஷன் ப்ராசஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைப்பெற்றது. அதில் யார் எல்லாம் இந்த வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களுக்கு தோன்றிய நபர்களின் பெயர்களை முன்வைத்தனர். அவர்கள் வைத்ததில் அதிகா ஓட்டுகளைப் பெற்ற போட்டியாளர்கள் தற்போது எவிக்‌ஷன் நாமினேஷனில் உள்ளனர். அவர்கள் யார் யார் என்றால் ஆதிரி, அப்சரா, வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் மற்றும் கலையரசன். இதில் கலையரசனுக்கு மட்டும் 12 ஓட்டுகள் விழுந்துள்ளது. இது பிக்பாஸ் வரலாற்றில் அதிக நாமினேஷன் ஓட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்காக கிளம்பிய சண்டை:

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் புதிதாக இந்த சீசனின் ஒரு சிஸ்டம் உள்ளது. அது என்ன என்றால் தண்ணீருக்கு என்று வீட்டின் கார்டன் ஏரியாவில் ஒரு டேங்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் தண்ணீர் விடும்போது எல்லாம் பிடித்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரைதான் சமையலில் இருந்து குளிப்பது வரை அனைத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

அந்த தண்ணீருக்கு சூப்ரவைசர்களாக வீட்டில் உள்ள போட்டியாளர்களில் இருந்து கம்ருதின் மற்றும் சபரியை பிக்பாஸ் நியமித்தார். இவர்கள் இருவரும் நேற்று இரண்டு முறை தண்ணீர் வந்த போது அதனை பிடிக்கத் தவறிவிட்டனர். இதுகுறித்து வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இவர்களிடம் சண்டையிடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… காந்தாரா சாப்டர் 1 படத்தை வெகுவாகப் பாராட்டிய ராஜ்குமார் பெரியசாமி

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பைசன் படத்தை யார் எல்லாம் தியேட்டரில் பார்க்கலாம்? சென்சார் போர்ட் கொடுத்த சர்டிஃபிகேட்!