பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் அடுத்த சண்டை ஆரம்பம் ஆனது – வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே சர்ச்சைகளும் தொடங்கியது. அதன்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சண்டை உருவாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் அடுத்த சண்டை ஆரம்பம் ஆனது - வைரலாகும் வீடியோ

பிக்பாஸ்

Published: 

08 Oct 2025 14:06 PM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி 3 நாட்களே ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து போட்டியாளர்கள் இடையே சண்டைகள் வெடிக்கத் தொடங்கி விட்டது. போட்டி தொடங்கிய நாள் அன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்களை சிவப்பு அல்லது நீலம் நிற பேட்ஜை தேர்வு செய்ய சொன்னார். அதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் இருந்த நிலையில் 13 நபர்கள் சிவப்பு நிற பேட்ஜையும் 7 போட்டியாளர்கள் நீல நிற பேட்ஜையும் தேர்வு செய்தனர். இதில் என்ன நடக்கும் என்று தெரியாமல் இவர்கள் தேர்வு செய்த நிலையில் பிக்பாஸ் அந்த பேட்ஜில் பல ட்விஸ்ட்களை வைத்து இருந்தார். அதில் வீட்டில் இந்த முறை பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அறைகள் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மாஸ்டர் பெட்ரூம் ஒன்று, சாதாரண பெட்ரூம் ஒன்று, டீலக்ஸ் பெட்ரூம் என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருந்தது.

இதில் மாஸ்டர் பெட்ரூம் வீட்டில் உள்ள கேப்டனுக்கு என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மற்ற இரண்டு பெட்ரூம்களை பிரித்த பிக்பாஸ் குறைவான எண்ணிக்கையில் உள்ள நீல நீல நிற பேட்ஜை தேர்வு செய்தவர்களுக்கு டீலக்ஸ் அறையும் சிவப்பு நிற பேட்கை தேர்வு செய்த மற்ற நபர்களுக்கு சாதாரணை அறையும் வழங்கப்பட்டது. அதன்பதி சாதாரணை அறையில் உள்ளவர்கள் டீலக்ஸ் அறையில் உள்ளவர்களுக்கு பணிவடை செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சண்டைகள்:

இந்த நிலையில் டீலக்ஸ் அறையில் உள்ள சுபிக்‌ஷா மற்றும் வியானா இருவரும் சாதாரணை அறையில் இருக்கும் பார்வதிக்கு வேலை சொல்கிறார்கள். இந்த போட்டி ஆரம்பித்ததில் இருந்தே இந்த வேலைகளை எல்லாம் சலித்துக்கொண்டே செய்கிறார் பார்வதி. இதனால் போட்டியாளர்கள் இடையே போட்டாப் போட்டி ஏற்படுகின்றது.

தொடர்ந்து அரசல் புரசலாக இருந்த இந்த சண்டை தற்போது வெடித்துவிட்டது. பார்வதி வியானா மற்றும் சுபிக்‌ஷா இருவருடையே சண்டையைபோட்டுவிட்டு இனி நான் இந்த வேலைகளை எல்லாம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு செல்கிறார். இதனைத் தொடர்ந்து அவரிடம் டீலக்ஸ் அறையில் உள்ளவர்கள் வேலை எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள்.

Also Read… கார் பறிமுதல் வழக்கில் துல்கர் சல்மானின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தாதாசாகேப் பால்கே விருது… ராணுவ தளபதியை சந்தித்த மோகன்லால் பாராட்டு பெற்றார்!

பெங்களூரு ஏ.டி.எம் கொள்ளை சம்பவம்.. வெளியான திடுக் தகவல்..
கோல்ஃப் உலகையே ஆச்சரியப்பட வைத்த பெண்ணின் வெற்றி - அப்படி என்ன நடந்தது?
பெண்கள் பெண்களை காக்கும் அதிசய சக்தி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் ரஷ்மிகா மந்தனா!
துபாய் ஏர்ஷோவில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானம்.. காரணத்தை சொன்ன நிபுணர்கள்..