2-வதாக பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட்டாகி போவது இவரா? வைரலாகும் தகவல்

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது இரண்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி முதல் வார நாமினேஷனின் இடம் பிடித்த இயக்குநர் பிரவீன் காந்தி குறைவான வாக்குகளைப் பெற்றதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்ட நிலையில் இன்று இரண்டாவதாக எவிக்டாகப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2-வதாக பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட்டாகி போவது இவரா? வைரலாகும் தகவல்

பிக்பாஸ்

Published: 

19 Oct 2025 11:23 AM

 IST

மொத்தம் 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரங்களைக் கடந்துள்ளது. முதல் வாரம் முடிவதற்கு முன்னதாகவே இந்தப் போட்டியில் இருந்து நந்தினி வெளியேறினார். அவர் உடல் நலக் குறைவால் வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் எவிக்‌ஷன் இருக்காது என்று மக்களும் போட்டியாளர்களும் நினைத்தார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியே எதிர்பாராததை எதிர்பாருங்கள் தானே அதன்படி முதல் வாரமும் எவிக்‌ஷன் இருக்கு என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நாமினேட் ஆன போட்டியாளர்களில் யார் வெளியேறுவார்கள் என்று உள்ளே இருந்த போட்டியாளர்கள் காத்திருந்த நிலையில் இயக்குநர் பிரவீன் காந்தி பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் குறைவான வாக்குகளைப் பெற்று முதல் போட்டியாளராக வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து வெளியே வந்து விஜய் சேதுபதியிடம் யுனிவர்ஸ் குறித்து பேசியது ரசிகர்களிடையே ட்ரெண்டானது. மேலும் அதனை கலாய்க்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பேசியதும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இரண்டாவது வாரம் முழுவதும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து நேற்று சனிகிழமை எபிசோடில் நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.

இரண்டாவதாக வெளியேறிய நபர் யார் தெரியுமா?

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசசில் கம்ருதின், எஃப் ஜே, அரோரா, கெமி மற்றும் அப்சரஸ் சிஜே ஆகிய 5 பேர் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசசில் இடம் பிடித்தனர். இதில் யார் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அப்சரஸ் சிஜே இந்த வாரம் குறைவான வாக்குகளைப் பெற்ற அப்சரஸ் சிஜே வீட்டை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

Also Read… தீவிர உடற்பயிற்சி, நியூ போட்டோ ஷூட் – நடிகர் சூரியின் வைரல் வீடியோ!

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது… அப்டேட் இதோ!