இந்த வாரத்தின் வர்ஸ்ட் ஃபர்பாமராக சிறை செல்லும் ரம்யா.. வைரலாகும் புரோமோ!
Bigg Boss Season 9: தமிழில் கடந்த 2025 அக்டோபர் மாதத்திலிருந்து ஆரம்பமாகி, விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 9 தமிழ். இந்த நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 10வது வாரத்தை கடக்கவுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்தின் வர்ஸ்ட் ஃபர்பாமராக பிக்பாஸ் சிறை செல்பவர்கள் தொடர்பான புரோமோ இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

ரம்யா ஜோ
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay sethupathi) தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் இந்த பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9). இதற்கு முன் கடந்த பிக் பாஸ் சீசன் 7 வரை உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கியிருந்தார். அதை அடுத்ததாக சீசன் 8 முதல் விஜய் சேதுபதி தொகுக்க தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2025 ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது தொடங்கி கிட்டத்தட்ட 10 வாரத்தை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த போட்டியிலிருந்து 10 போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், வைல்ட் கார்ட் எண்டரியாக ஆதிரை மீண்டும் இந்த நிகழ்ச்சியில் நுழைந்திருந்தார். மேலும் கடந்தவாரத்தில் பிரஜின் (Prajin) எலிமினேட் செய்யப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து அவரின் மனைவியும், பிக்பாஸ் போட்டியாளாருமான சாண்டரா மிகவும் பின் தங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது.
அதன் காரணமாக இந்த 11வது வாரத்தில் டபுள் ஏவிக்ஷன் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியான 1ல் புரோமோவில், பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்தின் வர்ஸ்ட் ஃபர்பாமரை (Worst performer) தேர்வுசெய்ய சொல்லப்பட்டிருந்தது. அதில் பலரும் ஆதிரை (Aadhirai), சாண்ட்ரா (Sandra) மற்றும் ரம்யாவை (Ramya Joe) கூறியிருந்தனர். இது தொடர்பான புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 29 படத்தில் முதலில் தனுஷ்தான் பண்ணுறதாக இருந்தது.. வெளிப்படையாக சொன்ன கார்த்திக் சுப்பராஜ்!
பிக் பாஸ் சீசன் 9 தமிழ் 68வது நாளின் முதல் புரோமோ வீடியோ பதிவு :
#Day68 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/QxDaweTeyv
— Vijay Television (@vijaytelevision) December 12, 2025
இந்த புரோமோவில் பிக் பாஸ் இந்த வாரத்திற்கான வர்ஸ்ட் ஃபர்பாமரை தேர்வு செய்ய சொல்கிறார். அதில் போட்டியாளர்கள் அனைவரும், ஆதிரை, சாண்ட்ரா மற்றும் ரம்யாவை கூறியிருந்தனர். இதில் தொடர்ந்து ரம்யாவை பலரும் தேர்வு செய்திருந்த நிலையில், அவர் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். மேலும் வி.ஜே. பார்வதி, அவரை காயப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட நிலையில், உடனே ரம்யா அவரை எதிர்த்து பேசியிருந்தார்.
இதையும் படிங்க: கைதி 2 படம் கைவிடப்பட்டதா? கார்த்தியின் பதிலால் கலங்கிய ரசிகர்கள்!
அந்த வகையில் இந்த வாரத்தின் வர்ஸ்ட் ஃபர்பாமராக போட்டியாளர்கள் அனைவரும் ரம்யாவை தேர்வுசெய்து சிறையில் தள்ளினர். இது தொடர்பான வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வாரத்தில் எந்தப் போட்டியாளர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதில் ரம்யா மற்றும் FJ இருவரும் வெளியேற வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.