ஓடிடியில் வெளியான பிக்பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Bun Butter Jam Movie: சின்னத்திரையில் பிரபலமாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார். திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஓடிடியில் வெளியான பிக்பாஸ் ராஜுவின் பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

பன் பட்டர் ஜாம்

Published: 

07 Sep 2025 20:55 PM

 IST

சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகம் ஆகியுள்ளார் நடிகர் ராஜு ஜெயமோகன். பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் அந்தப் போட்டியில் டைட்டில் வின்னராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையுலும் காமெடியில் கலக்கி வந்தார். இந்த நிலையில் நடிகர் ராஜு ஜெயமோகன் நாயகனாக நடித்து தற்போது தமிழ் சினிமாவில் வெளியான படம் பன் பட்டம் ஜாம். இந்தப் படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராஜு ஜெயமோகன் உடன் இணைந்து நடிகர்கள் ஆதியா பிரசாத், பவ்ய திரிகா, விக்ராந்த், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை, வி.ஜே.பப்பு என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். இந்த நிலையில் படம் கடந்த 18-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் தற்போது வெளியாகியுள்ளது.

பன் பட்டர் ஜாம் படத்தின் விமர்சனம் இதோ!

பள்ளி கல்வியை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்கிறார் சந்துரு (ராஜு ஜெயமோகன்). இவரது அம்மா சரண்யா பொன்வண்ணனின் பேச்சை மீறாத மகனாக இருக்கிறார். ஆனால் கல்லூரியில் காதலிக்க வேண்டும் என்று அவரது நண்பர் சரவணிடம் ஐடியா கேட்கிறார். அவர் கூறியதை ஃபாலோ செய்து கல்லூரியில் தன்னுடன் படிக்கும் நந்தினியை காதலிக்கிறார். நந்தினிக்கும் ராஜூ மீது காதல் ஏற்படுகிறது.

ஆனால் அந்த நந்தினி இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருப்பவர். அவரை சந்துருவின் நண்பர் சரவணன் நந்தினியை ஒருதலையாக முன்பு இருந்தே காதலிக்கிறார். இது சந்துருவிற்கு தெரியாது. சந்துரு நந்தினி உடனான காதலை சரவணனிடம் கூறும்போது அவர் மிகுந்த வேதனைக்குள்ளாகிறார். இதனால் சந்துருவுடன் பேசுவதைத் தவிர்கிறார்.

Also Read… தூங்கி எழுந்ததும் ரஜினிகாந்தா மாறியிருந்தா இதுதான் பண்ணுவேன் – சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய விசயம்

இந்த நிலையில் நன்றாக சென்று கொண்டிருந்த சந்துரு மற்றும் நந்தினிக்கு இடையே ஒரு விரிசல் ஏற்படுகிறது. அப்போது சரவணன் நந்தினியிடம் தனது காதலை வெளிப்படுத்த குழப்பத்தில் செல்லும் நந்தினி சந்துருவை விட்டுவிட்டு சரவணனை காதலிப்பதாக கூறுகிறார். இதனைத் தொடர்ந்து சந்துரு என்ன செய்தார் எப்படி அந்த விசயத்தில் இருந்து மீண்டார் என்பதே படத்தின் கதை.

பன் பட்டர் ஜாம் படத்தின் ட்ரெய்லர் இதோ:

Also Read… லோகா படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் மின்னல் முரளி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க