நீங்க இப்படி பண்ணிருக்கீங்களா… கவனம் பெறும் பிக்பாஸ் 9 தமிழ் நிகழ்ச்சியின் புது புரோமோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டியில் யார் யார் எல்லாம் கலந்துகொள்வார்கள் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் 9
சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் (Bigg Boss Tamil). இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது டிஆர்பியிலும் நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து 7 சீசன்களாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரல நடிகர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது ரசிகர்களும் அதனை மிகவும் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் 8-வது சீசனை தான் தொகுத்து வழங்கவில்லை என்றும் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதாகவும் சொந்த வேலைகள் காரணமாகவும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் என்று நேரடியாக ஓடிடியில் வெளியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் சிலம்பரசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9-க்காக காத்திருக்கும் மக்கள்:
அதன்படி முன்னதாக 7 சீசன்களாக இல்லாத வகையில் கடந்த 8-வது சீசனில் முற்றிலும் மாறுபட்ட முறையில் ஒளிபரப்பப்பட்டது. அதன்படி போட்டியாளர்களை ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தினர். இது தொடர்ந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த நிலையில் அடுத்ததாக வரவிருக்கும் 9-வது சீசனில் என்னென்ன மாற்றங்கள் இருக்க உள்ளது என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் தமிழ் குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
6 Days To Go 🧐🥳
பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும்
Bigg Boss Tamil Season 9 | Grand Launch – அக்டோபர் 5 முதல்..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #24*7Live #JioHotStarTamil #JioHotstar pic.twitter.com/BJjZcup2Xn
— JioHotstar Tamil (@JioHotstartam) September 29, 2025
Also Read… அந்த படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன்- நடிகை கயாடு லோஹர் பேச்சு!