விஜய் சார் படம் ரிலீஸாகுதுனா எங்க படத்தை திட்டமிடமாட்டோம் – நடிகர் பரத்

Actor Bharath Recent Interview Viral On Social Media: தமிழ் சினிமாவில் ரசிகரக்ளிடையே கவனத்தை ஈர்க்கும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் பரத். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்தும் அவரது படம் குறித்தும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் சார் படம் ரிலீஸாகுதுனா எங்க படத்தை திட்டமிடமாட்டோம் - நடிகர் பரத்

நடிகர் பரத்

Published: 

28 Mar 2026 16:33 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2003-ம் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் பரத். இந்தப் படத்தில் அவர் நாயகனாக இல்லாமல் நாயகனின் நண்பராக நடித்து இருந்தார். மேலும் இவருடன் இந்தப் படத்தில் பல நடிகர்கள் அறிமுகம் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பரத் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்படி இவரது நடிப்பில் வெளியான காதல், பிப்ரவரி 14, எம் மகன், வெயில்,  முனியாண்டி விழங்கியல் மூன்றாம் ஆண்டு, சேவல், வானம், காளிதாஸ், மிரள், லவ், ஒன்ஸ் அப்பான டைம் இன் மெட்ராஸ் என இவரது நடிப்பில் பல ஹிட் படங்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பரத் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் காளிதாஸ் 2. இந்தப் படத்தில் நடிகர் பரத் உடன் இணைந்து நடிகர்கள் பவானி ஸ்ரீ, அஜய் கார்த்தி, சுரேஷ் மேனன் மற்றும் சங்கீதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 3-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் பரத் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் சார் படம் ரிலீஸாகுதுனா எங்க படத்தை திட்டமிடமாட்டோம்:

அந்தப் பேட்டியில் நடிகர் பரத் பேசியதாவது, விஜய் சாரின் திரைப்படம் ஒன்று வெளியாவதாக இருந்தால், நாங்கள் எங்கள் கால அட்டவணைகளை இரண்டு வாரங்களுக்குப் பிறகே திட்டமிடுகிறோம். எந்தவொரு அறிவிப்பும் இல்லாவிட்டாலும், அது விஜய் சாரின் படமாக இருந்தால், ரசிகர்கள் அதைத் திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பார்கள். முன்னதாக விஜயின் தலைவா படத்தின் வெளியீட்டால் தனது 555 படம் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பதற்காக நடிகர் பரத் தனது வருத்தத்தை வெளிபடுத்தும் விதமாக பேசியது வைரலாகி வருகின்றது.

Also Read… Rashmika Mandanna: திருமணமாகி ஒரு மாதம் ஓவர்.. ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!

இணையத்தில் வைரலாகும் பரத்தின் பேச்சு:

Also Read… Dhanush: Faces Of Kara.. தனுஷின் கர படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுக புரோமோ வெளியீடு!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..