அவர் தேசிய விருது வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் – இயக்குநர் அட்லி

Director Atlee: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த இயக்குநர் அட்லி தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். அதன்படி இவர் சமீபத்தில் ஒரு படம் குறித்தும் அந்தப் படத்தின் இயக்குநர் குறித்து அட்லி பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

அவர் தேசிய விருது வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் - இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லி

Published: 

11 Oct 2025 13:34 PM

 IST

இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் அட்லி குமார் (Director Atlee Kumar). அதன்படி இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவில் வெளியான ராஜா ராணி என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தெரி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று படங்களையும் நடிகர் விஜயை வைத்து இயக்கினார் இயக்குநர் அட்லி குமார். இந்தப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படங்களின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறினார் இயக்குநர் அட்லி குமார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வந்த அட்லி குமார் இந்தி சினிமாவில் இயக்குநராக காலடிப்பதித்தார்.

அதன்படி நடிகர் ஷாருக் கானின் நடிப்பில் வெளியான ஜவான் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் இந்தி சினிமாவில் வெளியாகி ரூபாய் 1000 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்து இந்தி சினிமாவை ஒரு கலக்கு கலக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் தவிர்க முடியாத இயக்குநராக உருவெடுத்தார் இயக்குநர் அட்லி குமார். சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்று தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் அட்லி. இந்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனின் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்குநர் அட்லி குமார் இயக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காந்தாரா சாப்டர் 1 பார்த்தேன் ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கனும்:

அதன்படி இயக்குநர் அட்லி பேசியதாவது, காந்தாரா அத்தியாயம் 1 வெளியானபோது நான் ஆம்ஸ்டர்டாமில் இருந்தேன். படத்தைப் பார்க்க 2.5 மணி நேரம் பயணம் செய்தேன். உடனடியாக, நான் ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்தேன். அவர் அனைத்து திரைப்பட இயக்குநர்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம். அவர் நடிகர் மற்றும் இயக்குநரும் கூட. அவருக்கு தேசிய விருதை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.

Also Read… புஷ்பா 3 படத்திற்கு முன்பாக பிரபல நடிகருடன் இணையும் இயக்குநர் சுகுமார் – உற்சாகத்தில் ரசிகர்கள்

இணையத்தில் வைரலாகும் இயக்குநர் அட்லியின் பேச்சு:

Also Read… மமிதா பைஜூ கோ கோ வீரராக நடித்த இந்தப் படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ இந்த கோ கோ படத்தை ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்