சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

Director Ashwath Marimuthu talks about Suriyas Vaaranam Aayiram movie: தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக வலம் வரும் இயக்குநர்களில் ஒருவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சூர்யாவின் படம் தனது வாழ்க்கையை மாற்றியதாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது - இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

அஸ்வத் மாரிமுத்து

Published: 

26 Mar 2026 15:18 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான படங்கள் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இவரது இயக்கத்தில் வெளியான ஓ மை கடவுளே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாக உள்ள 51-வது படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்தப் படத்தின் கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் அஸ்வத் மாரிமுத்து. இந்த நிலையில் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் கதை மற்றும் படம் தொடர்பான அப்டேட்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அதன்படி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சிம்புவின் 51-வது படம் எப்படி அமையும் என்றும் வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தான் இயக்க விரும்பும் படங்கள் தொடர்பான விசயங்களையும் பணிபுரிய விரும்பும் நடிகர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசினார். மேலும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படம் தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்றும் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றிய படம் அது:

தில் ராஜு சாரின் தயாரிப்பு நிறுவனத்திற்காக நான் ஒரு கதையை உருவாக்க வேண்டியுள்ளது; அது நான் அளித்த ஒரு வாக்குறுதியாகும். சமீபத்தில் நான் அல்லு அர்ஜுன் சாரைச் சந்தித்தேன்; அது ஒரு நட்பு ரீதியான சந்திப்புதான். எங்கள் இருவரின் கால அட்டவணைகளும் ஒத்துப்போகுமா என்பதையும், நாங்கள் இணைந்து ஒரு திரைப்படம் செய்ய முடியுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நான் பல நடிகர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன். பிரதீப் ரங்கநாதன், தளபதி விஜய், கார்த்தி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் சூர்யா சார் ஆகியோருடன் மீண்டும் பணியாற்ற நான் ஆசைப்படுகிறேன். சூர்யா சாரின் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம், என் வாழ்க்கையைப் பற்றிய முழுமையான கண்ணோட்டத்தையே மாற்றியமைத்தது.

தற்போதைய நிலையில், நடிப்புத் துறை என்பது எனக்கு இன்னும் திறந்தவெளியாகவே இருப்பதாக நான் உணர்கிறேன்; அது நான் தொடர்ந்து ஆராய்ந்து வரும் ஒரு களமாகும். சமீபகாலமாக, திரைப்படங்களில் சிறப்புத் தோற்றங்களில் (cameos) நடிப்பதற்காக என்னை அணுகி வருகின்றனர்; நான் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞராகவே ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தும் உள்ளேன். இதுவரை நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரும்பாலும் ‘சாம்பல் நிறம்’ கொண்டவையாகவே (grey characters) இருந்துள்ளன. தற்போது என் உதவியாளர் ஒருவர் ஒரு திரைக்கதையை எழுதி வருகிறார்; அந்தக் கதாபாத்திரத்தை என்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்று அவர் உறுதியாகக் கூறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… Ashwath Marimuthu: என்னிடம் விஜய் சாருக்காகவே ஸ்பெஷல் கதை இருக்கு.. ஆனால் – அஷ்வத் மாரிமுத்து ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் அஸ்வத் மாரிமுத்து பேச்சு:

Also Read… Kara Movie: கர படத்தில் கருணாஸ் நடிக்கும் வேடம் இதுவா? – படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..