நல்லதோ கெட்டதோ எப்போதும் ஒன்றாக இருப்போம் – அசோக் செல்வன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

Ashok Selvan Emotional X Post: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அசோக் செல்வன் தற்போது வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகின்றது.

நல்லதோ கெட்டதோ எப்போதும் ஒன்றாக இருப்போம் - அசோக் செல்வன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

அசோக் செல்வன் - அஸ்வத் மாரிமுத்து மற்றும் விஜய் சேதுபதி

Published: 

16 Feb 2026 19:06 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடிகராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் அசோக் செல்வன் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான தெகிடி, ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், நித்தம் ஒரு வானம், போர் தொழில், ப்ளூ ஸ்டார் ஆகியப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் அசோக் செல்வனின் கெரியரில் மிகவும் முக்கியமான வெற்றியாக அமைந்தது ஓ மை கடவுளே படம் தான். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஓ மை கடவுளே படத்தின் 6 ஆண்டு கொண்டாட்டம் மற்றும் தனது முதல் படத்தில் நடித்த நடிகர் அசோக் செல்வனுக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நல்லதோ கெட்டதோ எப்போதும் ஒன்றாக இருப்போம்:

அந்தப் பதிவில் அசோக் செல்வன் கூறியதாவது, லவ் யூ மச்சா! ஓ மை கடவுளே படத்தை உருவாக்கியது வாழ்க்கையின் சிறந்த அனுபவங்களில் ஒன்றாகும். நல்லதோ கெட்டதோ, நாம் ஒரு குழுவாக ஒன்றாக இருந்தோம். நண்பர்களுடன் பணிபுரிவது போன்றது எதுவுமில்லை. எப்போதும் போல, நீ இன்னும் அற்புதமான படங்களைச் செய்ய வாழ்த்துக்கள். படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் சந்திக்கும் வரை, சியர்ஸ் மை பாய் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… திடீரென திருமணம் செய்துகொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை – குவியும் வாழ்த்துக்கள்!

அசோக் செல்வன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் அல்லு அர்ஜுன் – அட்லி படத்தின் ஷூட்டிங்… வைரலாகும் தகவல்

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்