ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளது ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படக்குழு

Arya's Mr. X Movie Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ஆர்யா. இந்தப் படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரிலீஸ் தேதியுடன் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளது ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படக்குழு

மிஸ்டர் எக்ஸ்

Published: 

12 Mar 2026 16:10 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் ஆர்யா. இவர் கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் இவர் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் இவரது கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து உள்ளம் கேட்குமே படத்திலும் ஆர்யாவின் கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கல்லூரியின் கதை படத்தில் இருந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார் நடிகர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் மிகவும் ஜாலியாக இளைஞர்களை கவரும் வகையில் இருப்பதால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கலகலப்பான கதைகளில் நடித்து வந்த ஆர்யா அவ்வபோது கதைகளை மையமாக வைத்து வெளியாகும் மகா முனி, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகர் ஆர்யா. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் ஆர்யா அவ்வபோது தயாரிப்பாளராக படங்களை தயாரித்து வருகின்றார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ஆர்யாவின் அடுத்தடுத்தப் படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படம் குறித்து வெளியானது முக்கிய தகவல்:

நடிகர் ஆர்யாவின் ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் மிஸ்டர் எக்ஸ் படம். இந்தப் படத்தை இயக்குநர் மனு ஆனந்த் எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகர் ஆர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படம் மொத்தம் 2 மணி நேரம் 33 நிமிடங்களை கொண்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி உடன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஓடிடியில் வெளியானது அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… உலக அளவில் ரீ ரிலீஸாகும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் – எப்போது தெரியுமா?

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..