சியான் 63 படம் குறித்து அப்டேட்டை தெரிவித்து விக்ரம் ரசிகர்களை கூலாக்கிய தயாரிப்பாளர்

Chiyaan 63 Movie Update: நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக என்ன படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் விக்ரமின் 63-வது படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு படம் குறித்த எந்த அப்டேட்டும் வரதாதால் படம் ட்ராப் ஆகிவிட்டது என்ற வதந்தி இணையத்தில் பரவியது.

சியான் 63 படம் குறித்து அப்டேட்டை தெரிவித்து விக்ரம் ரசிகர்களை கூலாக்கிய தயாரிப்பாளர்

சியான் 63

Published: 

05 Jul 2025 14:19 PM

நடிகர் விக்ரம் (Actor Vikram) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் வீர தீர சூரன் பாகம் 2. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் முதலிலும் முதல் பாகத்தை இரண்டாவதாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. அதன்படி இரண்டாவது பாகம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து வீர தீர சூரன் படத்தின் முதல் பாகத்தப் பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் விக்ரம் நடிப்பில் அவரது 63-வது படம் குறித்த அப்டேட்டை படக்குழு முன்னதாக அறிவித்தது. இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவர் முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சியான் 63 குறித்து அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பாளர் அருண் விஷ்வா:

தயாரிப்பாளர் அருண் விஷ்வா தற்போது 3 BHK படத்தை தயாரித்துள்ளார். இது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற தயாரிப்பாளர் அருண் விஷ்வாவிடம் சியான் 63 படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய தயாரிப்பாளர் அருண் விஷ்வா, சியான் 63 படம் குறித்து அறிவிப்பிற்கு பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை என்பதால் படம் ட்ராப்பாகிவிட்டது என்று வதந்தி பரவியது. இதனால் விக்ரமின் ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். ஆனால் சியான் 63 படத்தின் ப்ரீ புரடெக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இந்த சியான் 63 படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். படத்தின் அப்டேட்கள் வரவில்லை என்று ரசிகர்கள் என்னை திட்டுகின்றனர். ஆனால் படம் குறித்து அப்டேட்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் அருண் விஷ்வா தெரிவித்துள்ளார். இது தற்போது விக்ரம் ரசிகர்களை ஆசுவாசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சியான் 63 குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: