அர்ஜுன் தாஸின் புதிய படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Bomb Movie Official Teaser | தமிழ் சினிமாவில் நாயகன், வில்லன் என மாறி மாறி நடித்து ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

அர்ஜுன் தாஸின் புதிய படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட வெங்கட் பிரபு!

பாம்

Updated On: 

28 Jun 2025 11:12 AM

 IST

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி பின்பு நாயகனாக கலக்கி வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ் (Actor Arjun Das). தொடர்ந்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் பிசியாக நடித்து வரும் அர்ஜுன் தாஸ் தற்போது தமிழில் நாயகனாக நடித்துள்ள படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று 27-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு அர்ஜுன் தாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பாம் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளார். அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் விஷால் வெங்கட் இந்தப் படத்தை எழுதி தயாரித்துள்ளார்.

டைட்டில் டீசரின் முதல் காட்சியிலேயே கற்பனையான கிராமத்தில் நடந்த கதை என்று தொடங்குகிறது. வித்யாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

அர்ஜுன் தாஸின் பாம் பட டைட்டில் டீசரை வெளியிட்ட இயக்குநர் வெங்கர் பிரபு:

மிரட்டல் வில்லன் டூ நாயகன்… அர்ஜுன் தாஸின் சினிமா பயணம்:

தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் தனது கரகரத்த குரலுடன் மிரட்டும் வில்லனாக நடித்து இருந்தார் நடிகர் அர்ஜுன் தான். இவரது நடிப்பு பிரமாதமாக இருந்தாலும் இவரது குரலுக்கு ரசிகைகளின் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம்.

இப்படி மிரட்டும் வில்லனாக இருக்கும் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கும் போது கேட்கவா வேண்டும். இவர் நாயகனாக நடித்து இதுவரை வெளியான அநீதி, போர், ரசவாதி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி.

நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த இந்த குட் பேட் அக்லி படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் கலக்கி இருப்பார். இரட்டை வேடங்களில் நடிகர் அஜித் குமாருடன் சண்டைப்போடும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் விசில் பறந்தது. இந்த நிலையில் அடுத்தப் படத்தில் தற்போது நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ்.

Related Stories
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு அரசன் என பெயரிடப்பட்டுள்ளது
கார் விபத்திற்கு பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு!
Mamitha Baiju: மமிதா பைஜூ வந்ததும் ‘டியூட்’ படத்தின் பார்வையே மாறிவிட்டது – இயக்குநர் சொன்ன விஷயம்!
Harish Kalyan: எனது கேரியரில் நான் பண்ண பெரிய பட்ஜெட் படம் டீசல் தான் – ஓபனாக பேசிய ஹரிஷ் கல்யாண்!
Parasakthi: இன்னும் 100 நாட்களில் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் இதோ!
இட்லி கடை படம் உங்களுக்கு புடிச்சு இருக்கா? அப்போ மலையாளத்தில் வெளியான உஸ்தாத் ஹோட்டல் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க!