சிகிரி என்றால் என்ன? இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.ரகுமான் போஸ்ட்

What is chikiri | இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரண் படத்திற்கு தற்போது இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

சிகிரி என்றால் என்ன? இணையத்தில் கவனம் பெறும் ஏ.ஆர்.ரகுமான் போஸ்ட்

ஏ.ஆர்.ரகுமான்

Published: 

05 Nov 2025 14:37 PM

 IST

இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் (Music Director AR Rahman). இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பான் இந்திய அளவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். இவர் தற்போது நடிகர் ராம் சரண் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் பெடி படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதன்படி இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது பெடி படத்தில் இருந்து முதல் சிங்கிள் வெளியாவது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் இயக்குநர் புச்சி பாபு சனா இருவரும் பாடல் இசையமைப்பதற்கு முன்பு அதன் சீசனை பேசுவது அந்த வீடியோவில் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தப் படத்தில் சிக்கிரி என்ற பாடல் வருகின்ற நவம்பர் மாதம் 7-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிவ ராஜ்குமார், திவ்யேந்து சர்மா, ஜெகபதி பாபு, விஜி சந்திரசேகர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

7-ம் தேதி வெளியாகும் பெடி படத்திலிருந்து வெளியாகும் சிக்கிரி பாடல்:

இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற 27-ம் தேதி மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான விருத்தி சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் வெங்கட சதீஷ் கிலாறு மற்றும் இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில் சிக்கிரி பாடல் வருகின்ற 7-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… பராசக்தி படத்திலிருந்து வெளியானது அடி அலையே பாடலின் ப்ரோமோ வீடியோ

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… துல்கர் சல்மானின் காந்தா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ