AR Murugadoss : மதராஸி படத்தின் கதை இதுதான்.. ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த விளக்கம்!

AR Murugadoss About Madharaasi Movie Plot : இந்திய அளவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் தமிழ் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. இப்படத்தின் கதைக்களம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்து, அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

AR Murugadoss : மதராஸி படத்தின் கதை இதுதான்.. ஏ.ஆர். முருகதாஸ் கொடுத்த விளக்கம்!

சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் அனிருத்

Published: 

15 Aug 2025 16:37 PM

 IST

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சிக்கந்தர் (Sikandar). இந்தியில் வெளியான இப்படத்தில் நடிகர் சல்மான்கான் முன்னணி நடிகராக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இதனையடுத்து இவர் இயங்கிவந்த தமிழ்த் திரைப்படம் மதராஸி (Madharaasi). இதில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும்  அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது. இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் எஸ்கே 23 என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருக்கிறார். இவர் தமிழ் ஏற்கனவே ஏஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் என்ற நிறுவனமானது தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் இந்த மதராஸி படத்தின் கதைக்களம் குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : முதல் சந்திப்பு.. கண்ணீர் விடாமல் இருக்கமுடியவில்லை தலைவா! – வைரலாகும் விக்னேஷ் சிவனின் பதிவு!

நேர்காணலில் மதராஸி படம் பற்றி பேசிய ஏ.ஆர். முருகதாஸ்

அந்த நேர்காணலில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மதராஸி திரைப்படம் குறித்தும், மேலும் அப்படத்தின் கதைக்களம் பற்றியும் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர், ” மதராஸி படமானது ஒரு ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த படமாக உருவாகியிருக்கிறது. ஒரு காதல் எப்படி ஒரு மிகப்பெரிய ஆக்சனுக்கு காரணமாக அமைகிறது என்பது போன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட கஜினி படம்போல, கஜினியில் ஒரு ரிவென்ஜ் கதைபோல இருக்கும், ஆனால் , இந்த மதராஸி படமானது அதிலிருந்த கொஞ்சம் மாறுபட்ட படமாக இருக்கும் என இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க : நயன்தாரா – நிவின் பாலியின் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட் இதோ!

மதராஸி படத்தின் முதல் பாடல் :

மதராஸி திரைப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக வெளியாகக் காத்திருக்கிறது. இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் இருக்கும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.