AR Murugadoss : தமிழ் படங்கள் ரூ.1000 கோடிகள் வசூலிக்காததற்குக் காரணம் இதுதான்- ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

AR Murugadoss on Tamil Cinemas Box Office : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்நிலையில், இவர் தமிழ்த் திரைப்படங்கள் அதிகம் வசூல் செய்யாததற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி தெரிவித்துள்ளார்.

AR Murugadoss : தமிழ் படங்கள் ரூ.1000 கோடிகள் வசூலிக்காததற்குக் காரணம் இதுதான்- ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!

ஏ.ஆர். முருகதாஸ்

Published: 

18 Aug 2025 15:12 PM

தமிழில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) இயக்குநராக களமிறங்கியிருக்கிறார். தமிழில் இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) தர்பார் (Darbar) திரைப்படமானது இறுதியாக வெளியானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து இந்தியில் இவர், சல்மான் கானை வைத்து சிக்கந்தர் (Sikandar) என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்புகளைப் பெறவில்லை. இப்படத்தை அடுத்ததாக இவர் தமிழில் இயக்கியிருக்கும் படம் மதராஸி (Madharaasi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.  இந்தப் படம் அதிரடி லவ் ஆக்ஷ்ன் திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .

இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தமிழ் சினிமாவில் படங்கள் ஏன் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யமுடியவில்லை என்பது பற்றித் தெரிவித்துள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி படக்குழு வெளியிட்ட புதிய எக்ஸ் தள பதிவு!

தமிழ்த் திரைப்படங்கள் வசூல் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு :

சமீபத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அவரிடம் மதராஸி படம் குறித்து, தமிழ் சினிமா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் படங்கள் அதிகம் வசூல் செய்யாததற்குக் காரணம் பற்றிக் கூறியுள்ளார். அதில் அவர், ” மற்ற மொழி படங்கள் சுமார் ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்கின்றன. அந்த மொழி இயக்குநர்கள் படங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், படங்கள் மூலம் கருத்துக்களை மக்களுக்கு படிப்பிக்கிறார்கள் என அவர் அதில் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்கள் தொடர் தோல்வி – ஏ.ஆர். முருகதாஸ் கருத்து!

மதராஸி படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட் பதிவு

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் 23வது படமாக உருவாகியிருப்பது மதராஸி இப்படமானது, கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் இப்படமானது SKXARM என் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இப்படமானது அதிரடி காதல் மற்றும் மாபியா போன்ற கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறதாம்.

வரும் 2025, செப்டம்பர் 5 ஆம் தேதியில் உலகமெங்கும் இப்படமானது வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் குறித்த அறிவிப்புக்களை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.