Anirudh: KH X RK புரோமோ பிளான் பண்ணி பண்ணவில்லை.. அனிருத் சொன்ன விஷயம்!

Anirudh Ravichander About KH X RK Promo : பான் இந்திய பிரபல இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் KH X RK பட புரோமோவில் இடம்பெற்றிருந்தார். தற்போது அந்த புரோமோ குறித்து சுவாரஸ்யமான விஷயத்தை அனிருத் பகிர்ந்துள்ளார்.

Anirudh: KH X RK புரோமோ பிளான் பண்ணி பண்ணவில்லை.. அனிருத் சொன்ன விஷயம்!

KH X RK புரோமோ பற்றி அனிருத்

Updated On: 

02 Mar 2026 21:13 PM

 IST

இசையமைப்பாளராக பான் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவரின் இசையமைப்பில் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) போன்ற நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். தெலுங்கில் நானியின் (Nani) தி பாரடைஸ் படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், சமீபத்தில் முதல் பாடலான “ஆயா ஷெர்” என்ற பாடல் வெளியாகி தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதையடுத்து மேலும் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களுக்கும் இசையமைப்பாளராக இவர் பணியாற்றிவருகிறார்.

மேலும் கோலிவுட் சினிமாவின் மிகவும் பிரம்மாண்ட கூட்டணியில் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் ரஜினிகாந்தின் KH X RK படத்திற்கும் இவர்தான் இசையமைத்துவருகிறார். இவர் சமீபத்தில் வெளியான இப்படத்தின் புரோமோ வீடியோவில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த வீடியோ குறித்து சிறப்பான விஷயம் ஒன்றை இவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 25 நாட்களைக் கடந்த வித் லைவ் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட பதிவு

KH X RK திரைப்படத்தின் புரோமோ வீடியோ மேக்கிங் குறித்து அனிருத் சொன்ன விஷயம்:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அனிருத், அதில், “நெல்சன் திலீப்குமாரும், நானும் வரும் புரோமோ எல்லாமே திட்டமிட்டு எடுத்து இல்லை. கிட்டத்தட்ட அது ஓர் ரியாலிட்டி ஷோ மாதிரிதான் எடுப்போம். சாதரணமாகவே நானும் நெல்சனும் , சாதாரணமாக ஸ்டூடியோவில் ஒரு கேமரா கொடுத்தீங்கனா அதை வெச்சி எப்படி எடுப்போமோ அதுபோலத்தான் எடுத்தோம். நானும் நெல்சனும் ஒரே மாதிரியான நபர்கள்தான்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ரசிகர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்.. மாவீரன் 2 படம் குறித்து வெளியான அப்டேட் இதோ!

முதலில் அந்த ப்ரோமோவில் , ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சார் இருவரும் காரில் அமர்ந்து பேசுவது போன்று எடுக்கவேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தோம். அதன் பிறகு நாங்கள் இடம்பெற்றிருந்தது எல்லாமே எந்த பிளானும் இல்லை. எல்லாமே அந்த இடத்தில் சாதாரணமாக நாங்கள் பேசிய விஷயம்தான். மேலும் நான் நடனமாடுவது போன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவை எனது நண்பர் எடுத்தார். அந்த பாடலின் அவுட் எடுக்கும்போது நானா ஜாலியாக இருந்தபோது எடுத்த வீடியோ. சும்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

KH X RK திரைப்படத்தின் புரோமோ உருவாகியது குறித்து அனிருத் பேசிய வீடியோ பதிவு:

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்த KH X RK படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு இறுதியில் தொடங்கு என கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டிற்கு பிறகே நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ